கும்பம் ஐப்பசி மாத ராசி பலன் 2023!

கும்ப ராசி அன்பர்களே! துலாம் ராசியில் சூர்யன் வரவிருக்கும் மாதம்தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் கும்ப ராசியினைப் பொறுத்தவரை ஞாயிற்றுக் கிழமைகளில் தெய்வ வழிபாடு செய்து வரும்பட்சத்தில் வாழ்க்கையில் சகலவிதமான அனுகூலங்களும் ஏற்படும்.

பெற்றோர் மற்றும் பெரியோர்களுடன் வாக்குவாதங்கள் வேண்டாம். தொழில்ரீதியாக சுணக்கம் இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு எந்தவொரு காரியத்தினையும் செய்தால் மட்டுமே அடுத்த கட்டத்தினை நோக்கிப் பயணிக்க முடியும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சனி பகவானின் தாக்கம் உங்கள் முன்னேற்றத்தினைப் பல வகைகளில் தடுக்கும்; ஆனால் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் போராடும் மன நிலை இருந்தால் மட்டுமே தொடர்ந்து பயணிக்க முடியும்.

மாணவர்களைப் பொறுத்தவரை பெரிதளவில் படிப்பில் நாட்டம் இல்லாமல் காணப்படுவர். கவனச் சிதறல் பெரிதளவில் இருக்கும்; தேவையற்ற நட்பு வட்டாரத்தைத் தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் காது, மூக்கு, தொண்டை போன்ற உறுப்புகளில் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பெரிதளவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பீர்கள்; எதிர்பார்த்தது போன்ற வேலைவாய்ப்பானது கிடைக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.

வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருத்தல் வேண்டும், மிகப் பொறுமையுடன் வண்டியினை ஓட்டிச் செல்லுதல் வேண்டும். வண்டி, வாகனங்கள் ரீதியாக பழுது பார்க்கும் செலவினங்கள் ஏற்படும். மேலும் வீடு கட்டப்பட்டு வந்தநிலையில் பணப் பிரச்சினை காரணமாக அதனை முடிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

எதிர்பார்த்த இடங்களில் பண உதவிகள் இக்கட்டான நேரத்தில் கிடைக்காது; இதனால் நீங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பிள்ளைகள் உங்களின் கஷ்டத்தினைப் புரிந்து கொள்ளாமல் சற்று சோம்பலுடனே இருப்பர்; பிள்ளைகளுடன் பேசும்போது நிதானித்துப் பொறுமையுடன் பேசுதல் வேண்டும்.

திருமண காரியம் என்று கொண்டால் எதிர்பார்த்ததுபோல் வரன் எதுவும் அமையாது; பொறுமையுடன் செயல்படவும், படபடவென எந்தவொரு முடிவினையும் எடுக்காதீர்கள்.