குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாக இருக்கும். எதிரிகள் அல்லது எதிர்ப்புகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை அமையப் பெறும்.
வேலைரீதியாக இதுவரை வேலை இல்லாமல் இருந்தோருக்கு புதிய வேலை தேடிவரும். மேலும் மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். வெளிநாடு செல்ல நினைப்போருக்கு ஜாக்பாட் அடிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும்.
காதலர்களைப் பொறுத்தவரை பிரிவு ஏற்படும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தற்போதைக்கு எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம். தொழில்ரீதியாக எடுத்துக் கொண்டால் பணவரவு பெரிய அளவில் இருக்காது. வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமாக இருக்கும்.
தாய்- தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. வீடு, மனை வாங்க நினைப்போர் அதற்கான தேடுதல் முயற்சியில் களம் இறங்குவீர்கள். பூர்விகச் சொத்துகள் ரீதியான முடிவுகள் நேர்மறையானதாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு.
வண்டி, வாகனங்களில் செல்லும்போதும் இரவுப் பயணத்தின் போதும் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. பழைய கடன்கள் கழுத்தை நெரிக்கும்; மனம் தளராமல் தைரியத்துடன் செயல்படுங்கள்.