மாணவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவர், பெற்றோர் ஆதரவாகச் செயல்படுவார்கள். சனி பகவானுக்கு 8 ஆம் இடத்தில் சூர்ய பகவான் இருப்பதால் குடும்பத்தினரின் அனுசரணை இருக்கும்.
உடல்நலனைப் பொறுத்தவரை குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருத்தல் நல்லது. குழந்தைகள் ரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் அமையப் பெறும். திருமண காரியங்கள் தடை எதுவுமின்றி விறுவிறுவென நடந்தேறும்.
தந்தை- மகன் உறவில் விரிசல் ஏற்படும்; பேசும்போது கவனத்துடன் செயல்படுதல் வேண்டும். பூர்விகச் சொத்துகள் ரீதியாக வீண் செலவுகள் ஏற்படும், வியாபார அபிவிருத்தி செய்ய நினைப்போருக்கு ஏற்ற மாதமாக இருக்கும்.
பணவரவு குறைவாகவே இருக்கும். விரயத்திலேயே வாழ்வதுபோல் உணர்வீர்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறும். நினைத்த வேலை திடீர் வாய்ப்பாக கிடைக்கப் பெறும்.
பகுதி நேரமாக தொழில் துவங்க நினைப்போர் தயங்காமல் செய்யலாம். கணவன்- மனைவி உறவினைப் பொறுத்தவரை சிறு சிறு விரிசல்கள் இருக்கும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் சென்று வருவீர்கள்.