மீனம் மாசி மாத ராசி பலன் 2023!

By Gayathri A

Published:

மாணவர்களைப் பொறுத்தவரை இதுவரை மந்தநிலையில் இருந்து இருப்பீர்கள், ஆனால் இனி மிகவும் தெளிவான சிந்தனையுடன் இருப்பீர்கள். உறவினர்களின் தொந்தரவு கூடுதலாக இருக்கும், உடன் பிறப்புகளால் சொத்துகள்ரீதியான பிரச்சினைகள் பெரும் நெருக்கடியினைக் கொடுக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை ஓரளவு எதிர்பார்த்த வரன் அமையப் பெறும். சிலருக்கு திருமணம் சட்டென்று முடியவும் செய்யும். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி தேடிவரும்.

கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் சரியாகி மீண்டும் அன்புடன் நடந்து கொள்வர். குடும்பத்தில் மூன்றாம் நபர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும்.

குடும்ப உறுப்பினர்களால் கடன் ஏற்படும், வண்டி, வாகனங்கள் வாங்குவோர் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து வாங்குதல் நல்லது. தொழிலை அபிவிருத்தி செய்ய நினைப்போருக்கு அரசுரீதியான கடன் கிடைக்கப் பெறும்.

வீடு, மனை வாங்க நினைப்போருக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கும். வேலைவாய்ப்புரீதியாக எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். கொடுத்த பழைய கடன் வசூலாகும், வீட்டில் சுப காரியங்கள் நடந்தேறும். உடல் நலனைப் பொறுத்தவரை மருத்துவச் செலவு கூடுதலாக இருக்கும்.

தந்தையுடன் தேவையில்லாத சச்சரவுகள் ஏற்படும், நிதானத்துடன் செயல்படுதல் நல்லது.

மேலும் உங்களுக்காக...