வாஸ்து சாஸ்திரப்படி மனையை தேர்வு செய்வது எப்படி? படிக்கட்டுக்குக் கீழே இதை மட்டும் வச்சிடாதீங்க!

ஒரு வசிப்பிடம் கட்டும் முன்பு, ஒரு காலி மனையை தேர்வு செய்யும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். மனை சரியான அமைப்பில் அமையாவிட்டால், பல இன்னல்கள் உண்டாகும். 8 விதமான மனைகளும் அதன்…

vasthu

ஒரு வசிப்பிடம் கட்டும் முன்பு, ஒரு காலி மனையை தேர்வு செய்யும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். மனை சரியான அமைப்பில் அமையாவிட்டால், பல இன்னல்கள் உண்டாகும். 8 விதமான மனைகளும் அதன் தன்மைகளும் பற்றிப் பார்க்கலாம். வாஸ்து முறைப்படி எப்படி அமைக்க வேண்டுமோ அப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.

மேற்கு உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் உள்ள மனை- கோவீதி என்று அழைக்கப்படும். இது நல்ல செழுமைமையை தரும்.

வடமேற்கு உயர்ந்து தென்கிழக்கு தாழ்ந்து உள்ள மனை – அக்னி வீதி என்று அழைக்கப்படும். இது செல்வ இழப்பைத் தரும். வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்து உள்ள மனை – யம வீதி என்று அழைக்கப்படும். இது வாழ்க்கையில் பல்வேறு இழப்புக்களை தரும்.

வடகிழக்கு உயர்ந்து தென்மேற்கு தாழ்ந்தும் உள்ள மனை – பூத வீதி என்று அழைக்கப்படும். இது செழிப்பை இழக்க வைக்கும். கிழக்கு உயர்ந்து மேற்கு தாழ்ந்து உள்ள மனை – ஜல வீதி என்று அழைக்கப்படும். இது வறுமையை உண்டாக்கும்.

தென்கிழக்கு உயர்ந்து வடமேற்கு தாழ்ந்து உள்ள மனை – நாக வீதி என்று அழைக்கப்படும். இது குழந்தை இறப்பை உண்டாக்கும். தெற்கு உயர்ந்தது வடக்கு தாழ்ந்து உள்ள மனை – கஜ வீதி என்று அழைக்கப்படும். இது செல்வ செழிப்பை தரும்.

தென்மேற்கு உயர்ந்து வடகிழக்கு தாழ்ந்து உள்ள மனை – தானிய வீதி என்று அழைக்கப்படும். இதில் நல்ல வருமானத்தை தரும். நல்வாழ்வு தரும். எனவே ஒரு மனையை தேர்வு செய்வதற்கு முன்பு மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

படிக்கட்டுக்கு கீழே சமையலறை அமைக்க கூடாது. இது போன்ற அமைப்பு உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ செலவுகளை கொடுக்கும். பெண்களுக்கு எப்பொழுதும் மன அமைதியின்மையை ஏற்படுத்தும். கடனை ஏற்படுத்தி கொடுக்கும். குடல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சைகளை கொடுக்கும் எனவே படிக்கட்டுக்கு அடியில் சமையலறை கொடுப்பதை தவிர்ப்பது நன்று