பிறந்த தேதிப் பலன்கள்: 2 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!

Published:

Birthday Rasipalan Day 2: மன பலத்தால் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்ட 2-ம் தேதியில் பிறந்தவர்களே! பின்னால் வரவுள்ள விஷயங்களை தொலைநோக்குப் பார்வையால் முன்கூட்டியே அறிவுக் கூர்மையால் அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்; இதனால் உங்களுக்கு எடுத்த பல காரியங்களிலும் வெற்றியே!

நீங்கள் ஆகச் சிறந்த மன பலம், மன சக்தியினைக் கொண்டுள்ளீர்கள்; இதனால் நீங்கள் அனைவரின் குணங்களையும் எளிதில் கணித்துவிடுவீர்கள். இவை ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் உங்களுக்குப் பெரும் தயக்கமும், பயமும் இருக்கும்; இதனால் விறுவிறுவென நடக்கவிருக்கிற சில காரியங்கள் தள்ளிப் போகும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

கோபம் உங்களின் மற்றுமொரு பலவீனம் என்பதை நினைவில் கொண்டு எந்தவொரு நபரிடமும் பழகுங்கள். உங்களின் மனோசக்தியினை அதிகரியுங்கள்.

உங்களுக்கு எதிராக யாரேனும் வாதிட்டால் உங்களுக்கு அதுகுறித்த விஷயத்தில் அனுபவமே இல்லையெனினும் நீங்கள் வாதிட்டு வெற்றி பெறுவீர்கள். பேச்சுத் திறமையில் உங்களை அடித்துக் கொள்ளவே முடியாது.

குடும்பத்தில் வாழ்க்கைத் துணை செய்யும்  சிறு சிறு தவறுகளையும் பெரிதுபடுத்திச் சண்டை இடுவதைத் தவிர்க்கவும். யாரையும் எளிதில் நம்பும் குணம் உங்களிடம் கிடையாது; மேலும் எந்தவொரு பொறுப்பினையும் நீங்களே கையில் எடுத்து அதனை நீங்கள் செய்து முடித்தால் மட்டுமே திருப்தியுடன் இருப்பீர்கள்.

புதுமைகளைச் செய்து புரட்சியினை ஏற்படுத்துவீர்கள்;

அதிர்ஷ்ட தேதிகள் மற்றும் நிறங்கள்

2 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 1,10,19,

நீங்கள் தவிர்க்க வேண்டிய தேதிகள்: 2,11, 20,29

உங்களுக்கு உகந்த நிறம்: பச்சை நிறம், பாசி நிறம், வெளிர் மஞ்சள்

தவிர்க்க வேண்டிய நிறம்: சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.

உங்களுக்கு உகந்த நவரத்தினக் கல்- முத்து அல்லது வைடூரியம் பயன்படுத்தவும்; மேலும் இதனை தங்கத்துடன் போடாமல் வெள்ளியுடன் மட்டுமே போடவும்.

தொழில் துறை – அழகு சார்ந்த பொருட்கள் விற்பனை செய்தல், ஓவியத் துறை, சங்கீதத் துறை, குளிர்பானங்கள் விற்பனை செய்யும் தொழில், பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் துறை போன்ற துறைகள் உங்களுக்கு ஏற்ற துறைகளாகும்.

எந்தவொரு பிரச்சினையையும் முடிவுக்குக் கொண்டுவரும் வரை ஓயாமல் அதனை முடிவுக்குக் கொண்டு வரப் போராடுவீர்கள்; ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க சந்திர வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சிவபெருமான் அல்லது பெருமாள் கோவிலில் உள்ள அம்மனை மனமுருகி வழிபாடு செய்து வாருங்கள். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தவறாமல் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பௌர்ணமி நாளில் விரதம் இருப்பது உங்களுக்கு ஆகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

மேலும் உங்களுக்காக...