தமிழக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அசுர வளர்ச்சியைப் பார்த்துவிட்டு, பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்குள் எழுந்துள்ள உள்ளடி விவகாரங்களும் பயமும் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக நம்பியிருந்த ‘ஜென்சி’ இளைஞர் கூட்டம் இன்று அக்கட்சிக்கே ஒரு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. கட்டுப்பாடே இல்லாத, கொள்கைப் பிடிப்பில்லாத ஒரு சில பச்சோந்தி ஜென்சி கூட்டத்தை வைத்துக் கொண்டுதான் திமுக வளரப் போகிறது என்று அக்கட்சி தலைமை நம்பியது. ஆனால், அந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளை அண்மையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்களிலிருந்தே அரசியல் விமர்சகர்கள் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நாங்கள் எதிரி யார் என்றே தெரியாமல் இத்தனை காலம் போராடிவிட்டோம்; ஊர் ஊராக, தெருத் தெருவாக 40 முதல் 50 நாட்கள் சுற்றியும் கூட, எங்கள் சொந்த வீட்டுக்குள்ளேயே ஓட்டு கேட்க மறந்துவிட்டோம்” என்று புலம்பியிருந்தார். ஒரு தேர்வுக்குச் செல்லும் மாணவன் எந்தப் பாடத்திற்குத் தேர்வு எழுதப் போகிறோம் என்று தெரியாமல் போனால் எப்படித் தோல்வியடைவானோ, அதே போன்ற ஒரு முதிர்ச்சியற்ற அரசியலையே திமுக செய்துள்ளது என்பதை உதயநிதி ஒப்புக்கொண்டுள்ளார். கையில் உளவுத்துறை, ஊடக பலம், ரிப்போர்ட்டர்கள் என அனைத்தும் இருந்தும், தவெக எனும் புதிய அலையைத் தவறாகக் கணித்து, அவர்களை உதாசீனப்படுத்தியதன் விளைவைத்தான் திமுக இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அடுத்த பிளெண்டர் பேச்சு என்னவென்றால், “தவெக எம்எல்ஏக்கள் யார் என்றே எங்களுக்குத் தெரியாது, அப்புறம் எப்படி நாங்கள் அவர்களை விலைக்கு வாங்க முடியும்?” என்று கேலி பேசியதுதான். புதிய முகங்களோ, சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்த இளைஞர்களோ எம்எல்ஏக்களாக வந்தால் அவர்களை எம்எல்ஏக்களாகவே மதிக்க மாட்டோம் என்ற திமுகவின் ஆதிக்கப் புத்தியையே இது காட்டுகிறது. திமுகவின் பார்வையில் பல கோடி ஊழல் செய்திருக்க வேண்டும், பாரம்பரிய அரசியல் குடும்பமாக இருக்க வேண்டும் என்ற தகுதிகளை மட்டுமே பார்ப்பதால், தவெகவின் புதிய மக்கள் பிரதிநிதிகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதிரி யார் என்று தெரியாது, எம்எல்ஏ யார் என்று தெரியாது என்று புலம்பும் திமுக, அடுத்து தங்களுக்கு வாக்களித்த மக்கள் யார் என்றே தெரியவில்லை என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்படும்.
இன்னொரு பக்கம், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நேர்மையான நிர்வாகம் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே மரண பயத்தைக் காட்டியுள்ளது. குறிப்பாக, பதிவுத்துறையின் வரலாற்றிலேயே முதன்முறையாக லஞ்சமில்லாமல், நேர்மையான முறையில் பணியிட மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகச் சார்பதிவாளர்கள் சங்கமே பாராட்டு தெரிவித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதிவு செய்வதற்குப் பத்திரத்திற்கு 30,000 முதல் 50,000 ரூபாய் வரை கமிஷன் கொடுக்க வேண்டிய லஞ்ச நடைமுறையை முதலமைச்சர் விஜய் ஒழித்துக் கட்டியுள்ளார். லஞ்சமில்லாத இத்தகைய ஒரு நல்லாட்சியை மக்கள் பார்த்துவிட்டால், மீண்டும் தங்களைப்போன்ற லஞ்சக் கட்சிகளைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் என்ற பயத்தில்தான் திராவிடக் கட்சிகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த தூய்மையான ஆட்சி தான் எங்களுக்கு நிரந்தரமாக வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டால் விஜய் தொடர்ச்சியாக தேர்தலில் ஜெயிப்பார், திராவிட கட்சிகள் தொடர்ந்து தோல்வி அடையும் என்பது தான் உண்மை…
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
