செவ்வாய் விரதம், சஷ்டி விரதம், பரணி விரதம் என முருகனுக்கு 3 விரதங்கள் உள்ளன. சஷ்டி என்றாலே நமக்கு மகாகந்த சஷ்டி தான் நினைவுக்கு வரும். அது 1 வருடத்தில் 7 நாள்கள் இருக்கக்கூடிய மிகப்பெரிய விரதம். அதுதான் நாம முருகனுக்கு அளவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய விரதம்.
மகாகந்த சஷ்டி தான் 7 நாள்கள் இருக்கும் பெரிய விரதம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்தது. இதைத் தவிர்த்து ஒவ்வொரு மாதங்களிலும் விசேஷமான நாள்கள் இருக்கு. அதுல வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை விசேஷம். திருத்தணியில் பூவினால் ஆன காவடியை பக்தர்கள் கொண்டு செல்வர். அதற்கு புஷ்பகாவடி என்று பெயர்.
கார்த்திகை சோமவாரம் சிவபெருமானுக்கும், முருகனுக்கும் விசேஷம். இதுல பெரிய கார்த்திகை தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குலதெய்வத்தின் அருளைப் பெற்றுத் தருவது இந்தக் கார்த்திகை சோமவாரத்துக்கே உண்டான தனிச்சிறப்பு. தைப்பூசம் உலகளாவில் கொண்டாடும் உன்னத விழா. பாதயாத்திரை, பால் குடம், காவடி என பல சிறப்புகள் உள்ளன.
குமார சஷ்டி என்பது தெரியாத விரதம். சஷ்டிகளில் ஆனி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி தான் குமார சஷ்டி விரதம். குழந்தைப் பேறு, வாழ்க்கையில் வளர்ச்சிக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாள் தான் இந்த குமார சஷ்டி விரதம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



