2026 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் யுகப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த திமுக, இந்த தேர்தலில் ஆட்சியை இழந்ததோடு மட்டுமல்லாமல், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்து சட்டமன்றத்திற்குள் கூட நுழைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அரசியல் களத்தில் தங்களை விட மிகவும் ஜூனியர் என்று நினைத்த தவெக தலைவர் விஜய்யிடம் ஒட்டுமொத்தமாக தோற்றுவிட்டோமே என்ற அதிர்ச்சியையும் கவலையையும் திமுக தலைவரால் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அவரது தற்போதைய பேச்சுகளிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக அரசு அமைந்த தொடக்கத்தில், ஜனநாயக முறைப்படி புதிய அரசுக்கு ஆறு மாதங்கள் வரை எந்தவொரு தொந்தரவோ அல்லது இடையூறோ கொடுக்க மாட்டோம் என்று திமுக தரப்பில் மிகவும் பக்குவமாக பேசப்பட்டது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல திமுகவின் மெகா கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற முக்கியக் கட்சிகள் அனைத்தும் தவெக அரசிற்கு ஆதரவளித்து அமைச்சரவையில் பங்கேற்றவுடன், திமுகவின் அரசியல் வியூகங்கள் அனைத்தும் மொத்தமாக சரிந்துவிட்டன. இந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே, தங்களது கூட்டணிக் கட்சிகளை தவெக அரசிற்கு ஆதரவளிக்குமாறு நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று தற்போதைய எதார்த்தத்திற்கு மாறான கருத்துக்களை திமுகவினர் முன்வைக்க தொடங்கினர்.
ஆயினும், தங்களது நீண்ட கால கூட்டாளிகளான காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகள் தங்களை முற்றிலுமாக தனிமைப்படுத்திவிட்டு, புதிய தவெக அமைச்சரவையில் கௌரவமான பதவிகளை பெற்றுக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றதை திமுக தலைமையால் தாங்கி கொள்ள முடியவில்லை. தங்களுக்கு பல துரோகங்களை செய்துவிட்டுத்தான் அவர்கள் தவெக மந்திரிசபையில் இடம் பிடித்துள்ளார்கள் என்று திமுக மேடைகளில் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இத்தகையதொரு இக்கட்டான அரசியல் தனிமைப்படுத்தல், தமிழகத்தின் மிகப்பழைமையான ஒரு பேரியக்கத்தை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய தற்காப்பு நிலைக்கு தள்ளியுள்ளது.
கூட்டணி முறிவுகளால் நிலைகுலைந்துள்ள திமுக தலைமை, தற்போது தவெக அரசை நோக்கி பல்வேறு அரசியல் விமர்சனங்களையும் சாபங்களையும் முன்வைக்க தொடங்கியுள்ளது. இந்த புதிய ஆட்சி நீண்ட நாட்களுக்கு தாங்கது என்றும், மிக விரைவில் இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்றும் திமுகவினர் பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளனர். மேலும், சமூக ஊடகங்களின் பேராதரவோடு இளைஞர்களின் வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடித்ததால், தற்போதைய தவெக அரசை வெறும் ‘இன்ஸ்டா அரசு’ என்று வர்ணித்து, இதன் நிர்வாக திறமையை குறைத்து மதிப்பிடுவதற்கான முயற்சிகளிலும் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஆனால், முந்தைய திராவிட ஆட்சிகளின் கமிஷன் மற்றும் புரோக்கர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பொறுப்பேற்ற மிகக் குறுகிய நாட்களிலேயே அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்தியுள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி நிர்வாக வேகத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். திமுக தலைமை எந்த அளவிற்கு தங்களது தோல்வியின் ஏமாற்றத்தால் மேடைகளில் புலம்பினாலும், தமிழக அரசியல் களம் இப்போது புதியதொரு திசையை நோக்கி முழுமையாக பயணித்துவிட்டது என்பதுதான் எதார்த்தம். மக்களின் பேராதரவோடு அரியணையில் ஏறியுள்ள இந்தத் தூய சக்தியின் ஆட்சியை இதுபோன்ற வெற்று விமர்சனங்களால் ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாது என்பதே உண்மை நிலை.
சுருக்கமாக சொன்னால், தேர்தல் களம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி இன்னும் ஐந்து ஆண்டுகாலத்திற்கு ஸ்டாலின் சட்டமன்றத்திற்குள் கூட நுழைய முடியாத ஒரு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் எம்.எல்.ஏவாகக் கூட இல்லாத இந்தச் சூழலில், தவெக அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மக்கள் நல முத்திரையைப் பதித்துத் தனது செல்வாக்கை மேலும் அதிகரித்து வருகிறது. பழைய சுயநல அரசியல் கணக்குகள் அனைத்தும் ‘பணால்’ ஆகிவிட்ட நிலையில், வரும் 2031 ஆம் ஆண்டு வரை புதிய தமிழகத்தின் நிர்வாக பெருமைகளையும், தவெகவின் அசுர வளர்சியையும் வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழியில்லை என்பது மட்டும் திண்ணம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
