அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம் முதல்படை வீடு. இங்கு கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு கிரிவலம் கிடையாது. மலை வெளியே தெரியாது. கோவிலுக்குள் இருக்கும். வேண்டுதலுக்காக பிரார்த்தனை என்றால் 6 முறை வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வரலாம்.
திருவாவினன்குடி என்றழைக்கப்படும் பழனி 3ம் படை வீடு. இங்கும் கிரிவலம் போகலாம். நான்காம் படைவீடு சுவாமி மலை. சின்ன குன்று. வெளியில் இருநந்து பார்த்தால் இது மலை என்று தெரியாது. கோவிலுக்குள் உள்பிரகாரமாக வலம் வரலாம். 5வது படைவீடு திருத்தனி. இது மலை என்பது நமக்குத் தெரியும். 6வது பழமுதிர்ச்சோலை. இது பிரம்மாண்டமான மலை.
அதனால் கிரிவலம் சாத்தியம் கிடையாது. கோவிலுக்குள் சுற்றி வரலாம். தென்காசி அருகில் உள்ள தோரணமலை அற்புதமான முருகன் கோவில். இங்கு பல சித்த புருஷர்கள் வந்துள்ளனர். இங்கு மாத பவுர்ணமி கிரிவலம் பிரசித்திப் பெற்றது. அதே போல் பண்பொழியும் கிரிவலம் பிரசித்திப் பெற்றது.
காட்பாடி வேலூர் அருகில் வள்ளிமலை முருகன் கோவிலில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. முருகப்பெருமான் வள்ளியை மணம்புரிவதற்காக வந்த தலம். அதுபோல குன்றக்குடி முருகன்கோவிலில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. மயிலம் என்ற தலத்தில் சிவபாலசித்தர் தவம் செய்து முருகப்பெருமானை வழிபட்ட அழகான திருத்தலம். சிவன்மலை, ஓதிமலை, ரத்னகிரியும் முருகன்கோவில் கிரிவலத்துக்குப் பிரசித்திப் பெற்றது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



