வாழ்க்கையில் முன்னேற… இறைவன் அருள் கிடைக்க ஈசியான வழி!

எதைச் செய்தாலும் சரியா வரல. எனக்கு நேரமே இல்ல. நான் எப்படி இதை எல்லாம் செய்ய முடியும்னு சிலர் அங்கலாய்ப்பர். அவர்களுக்குத் தேவையான வேலையைக்கூட செய்ய மாட்டார்கள். அவ்ளோ சோம்பேறியாக இருப்பர். எழுவதே எட்டரை…

எதைச் செய்தாலும் சரியா வரல. எனக்கு நேரமே இல்ல. நான் எப்படி இதை எல்லாம் செய்ய முடியும்னு சிலர் அங்கலாய்ப்பர். அவர்களுக்குத் தேவையான வேலையைக்கூட செய்ய மாட்டார்கள். அவ்ளோ சோம்பேறியாக இருப்பர். எழுவதே எட்டரை மணியாகத்தான் இருக்கும். இவர்களுக்கு தான் நச்சுன்னு ஆணி அடித்தாற்போல சொல்கிறார் இந்த பிரபலம்.

வாழ்க்கையில முன்னேற்றம் என்பதை எல்லாரும் விரும்புவோம். குழந்தை முதல் பெரியவர் வரை எல்லாருக்கும் அவசியம். ஒரு குழந்தை என்ன நினைக்கும்? நல்லா வளர்ந்து பெரியனா ஆகணும். சமுதாயத்துக்கு நல்லது செய்யணும். ஏழைகளுக்கு உதவணும்கற எண்ணம் வரும்.

அதே மாதிரி பெரிய வெற்றி அடைஞ்சு நல்ல நிலையில் முன்னேறி இருப்பவர்களுக்கும் அந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அந்த வகையில முன்னேற எல்லாருமே விரும்புவோம். அதனால இந்த ஒன்றை மட்டும் நாம சரியாகப் பயன்படுத்தினால் போதும். அதுதான் நேரம்.

வள்ளுவர், ”ஞாலம் கருதினும் கைகூடும். காலம் கருதி இடத்தாற் செயின்” என்கிறார். உலகத்தையே கைக்கு கொண்டு வரணும்னா காலம், இடம் தேர்வு செய்து உழைக்க வேண்டும் என்கிறார். யோசிக்காமலா சொல்லி இருப்பாரு? உலகத்தையே கைக்கு கொண்டு வர முடியுதுன்னா எவ்ளோ வலிமையானது நேரம் என்று எண்ணிப் பாருங்கள்.

நல்லா வெற்றி அடைந்தவர்களுக்கும் 24 மணி நேரம் தான். முயற்சி பண்றேன்னு சொல்றவங்களுக்கும் 24 மணி நேரம் தான். அதனால நேரம் பத்தாதுன்னு சொல்லக்கூடாது. நேரத்தைத் திட்டமிட்டு மிகச்சரியாகப் பயன்படுத்தி அதற்கேற்ப உழைத்தால் நிச்சயம் இறைவன் அருள் கிடைக்கும் என்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி.