1 வருடத்திற்கு முன்னரே தோல்வியை கணித்த உதயநிதி.. உதயநிதி சொன்னதை காது கொடுத்து கேட்காத ஸ்டாலின்? முக்கிய குடும்ப உறுப்பினரின் சொல்பேச்சை கேட்டு ஏமாந்தாரா ஸ்டாலின்? இனி திமுக உதயநிதி கையில் செல்லுமா? வயதான தலைவர்கள் களையெடுக்கப்படுவார்களா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான தி.மு.க-விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சிக்குள் நிலவும் பூசல்கள் தற்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளன. குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலினின் தோல்வியும், கட்சியின் பின்னடைவும் உதயநிதி ஸ்டாலினை கடும்…

stalin udhayanidhi 2

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான தி.மு.க-விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சிக்குள் நிலவும் பூசல்கள் தற்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளன.

குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலினின் தோல்வியும், கட்சியின் பின்னடைவும் உதயநிதி ஸ்டாலினை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தெரிகிறது. கடந்த ஓராண்டாகவே தேர்தல் பணிகள் தொடர்பாக உதயநிதி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்மொழிந்தும், அவை தலைமை பீடத்தில் நிராகரிக்கப்பட்டதே இந்தத் தோல்விக்கு காரணம் என்ற பேச்சு அறிவாலய வட்டாரத்தில் பலமாக ஒலிக்கிறது.

அமைப்புரீதியாக மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்றும், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உதயநிதி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். ஒருவர் கையிலேயே அதிக தொகுதிகள் இருப்பது தேர்தல் நேரத்தில் நிர்வாக சிக்கல்களை உண்டாக்கி பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்திருந்தார். ஆனால், உதயநிதியின் இந்த ஆலோசனைகளை குடும்ப உறுப்பினர் ஒருவர் ஸ்டாலினிடம் வாதாடி முட்டுக்கட்டை போட்டு தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுவே தேர்தல் களத்தில் கட்சி இயந்திரம் மந்தமாக செயல்பட வழிவகுத்ததாக புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இளைஞர்களின் வாக்குகளை தீவிரமாகப் பிரிப்பார் என்பதை உணர்ந்த உதயநிதி, அதனை எதிர்கொள்ள அதிகப்படியான இளைஞர்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரியிருந்தார். ஆனால், உதயநிதி தனது இளைஞரணிக்கு அதிக வாய்ப்பு கேட்கிறார் என்று மூத்த நிர்வாகிகளை உசுப்பேற்றி, ஸ்டாலினிடமே அவர்களை சண்டையிட வைத்திருக்கிறார் அந்த குடும்ப உறுப்பினர். இதனால் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, பழைய முகங்களே களமிறக்கப்பட்டதும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தலைநகரில் மாண்புமிகுவாக இருந்த ஒரு முக்கிய புள்ளியை பற்றி உதயநிதி ஏற்கனவே அடுக்கடுக்கான புகார்களை ஸ்டாலினிடம் வாசித்துள்ளார். இருப்பினும், அந்த புகார்கள் எதையும் ஸ்டாலின் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இறுதியில் ஸ்டாலினே தனது தொகுதியில் தோல்வியை தழுவியதுதான் மிச்சம். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், “நான் சொன்னதை காது கொடுத்து கேட்டிருந்தால், இந்த நிலைமை வந்திருக்குமா?” என்று உதயநிதி தனது ஆதங்கத்தை வெடித்து தீர்த்துவிட்டாராம்.

ஸ்டாலினின் தனிப்பட்ட தோல்விக்கு அந்த முன்னாள் மாண்புமிகுவே முழுமுதற்காரணம் என உதயநிதி கொதிப்பில் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கட்சியின் நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றங்களை செய்ய அவர் முடிவு செய்துள்ளார். குறிப்பாக, தேர்தல் ஆலோசனை சொன்ன நிறுவனத்தின் செல்வாக்கை குறைப்பதுடன், முடக்கி வைக்கப்பட்டிருந்த மாவட்ட பிரிப்பு விவகாரத்தை தீவிரப்படுத்தி, கட்சியின் பிடியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதயநிதி திட்டமிட்டுள்ளார்.

இந்த தேர்தல் தோல்வி தி.மு.க-விற்குள் ஒரு தலைமுறை மாற்றத்திற்கான அவசியத்தை உணர்த்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். உதயநிதியின் எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்திய மூத்த நிர்வாகிகளின் பிடிவாதம், கட்சிக்கு மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளது. வரும் காலங்களில் கட்சி பதவிகளிலும், ஆட்சி அதிகார பகிர்விலும் உதயநிதியின் கை ஓங்கும் என்றும், இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டன என்றும் கோட்டை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.