பொதுவா நமக்கு உடம்பு சரியில்லன்னா… டாக்டர் கிட்ட போவோம். மாத்திரை வாங்குவோம். சாப்பிடுவோம். மறுபடியும் அதே பிரச்சனை வருகிறது. ஏன் தெரியுமா? நாம் அறிகுறியை சரிசெய்கிறோம். காரணத்தை சரிசெய்வதில்லை. இதோ சில எளிய தீர்வுகள்…
மூச்சு விட சிரமப்படுகிறாயா..? மூக்கால் மட்டும் மூச்சு விடு. பெரும்பாலான மனிதர்கள் வாயால் மூச்சு விடுகிறார்கள். இது தவறு. மூக்கால் மூச்சு விடும்போது காற்று வடிகட்டப்படுகிறது, சூடாக்கப்படுகிறது. நைட்ரிக் ஆக்ஸைடு சுரக்கிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நுரையீரல் வலுவடையும். தினமும் மூக்கால் மட்டும் மூச்சு விடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்.
வயிறு எப்போதும் பெரிதாக இருக்கிறதா..? சாப்பிடும் நேரத்தை சரிசெய். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எப்போது சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். காலை 8 மணிக்கு சாப்பிட தொடங்கி இரவு 8 மணிக்குள் முடி. இரவு தாமதமாக சாப்பிடுவதை நிறுத்து. இந்த ஒரு மாற்றமே வயிறு சுற்றளவை குறைக்கும்.
மூளை மழுங்கலாக இருக்கிறதா..? குளிர்ந்த நீரில் குளி. வெதுவெதுப்பான நீரில் குளித்து முடிக்கும்போது 30 நொடி குளிர்ந்த நீரை விடு. இது நோர்பைன்ப்ரைன் (Norepinephrine) என்ற ஹார்மோனை 300% வரை அதிகரிக்கும். மூளை திடீரென விழிப்படையும். கவனிக்கும் திறன் கூடும். ஒரு கோப்பை காபியை விட இது நூறு மடங்கு சக்திவாய்ந்தது!
இதயம் வேகமாக துடிக்கிறதா..? இடது பக்கமாக படு. இரவில் இடது பக்கமாக படுத்து தூங்கு. இது இதயத்திற்கான அழுத்தத்தை குறைக்கும். செரிமானம் சீராகும். ஆசிட் ரிஃப்ளக்ஸ் (Acid reflux) குறையும். நம் ஆயுர்வேதமும் இந்த வாமக்குக்சி தூக்கத்தை பல நூறு ஆண்டுகளாக பரிந்துரைக்கிறது.
பல் சொத்தையும், ஈறு பிரச்சனையும் வருகிறதா…? எண்ணெய் கொப்பளி. காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடு. 10 முதல் 15 நிமிடம் வாயில் சுழற்று. துப்பு. வாயில் உள்ள கிருமிகள் அழியும். ஈறு வலுவடையும். பல் வலி குறையும். இது நம் சித்தர்கள் காலத்திலிருந்து வரும் அற்புத மருத்துவம்.
மூக்கு அடைப்பாக இருக்கிறதா…? மூச்சை நிறுத்தி தலையை அசை. மூச்சை உள்ளே இழுத்து பிடி. தலையை மேலும் கீழும் மெதுவாக அசை. மூச்சு தாங்காத வரை பிடி. விடு. மூக்கு 10 நொடியில் திறக்கும். இது மூக்கில் நைட்ரிக் ஆக்ஸைடு அளவை அதிகரிக்கும். எந்த மருந்தும் வேண்டாம்.
அதிகமாக வியர்க்கிறதா…? மெக்னீசியம் நிறைந்த உணவு சாப்பிடு. உடலில் மெக்னீசியம் குறைந்தால் நரம்பு மண்டலம் அதிக உணர்திறன் அடையும். அதிக வியர்வை, கால் பிடிப்பு, தூக்கமின்மை எல்லாம் வரும். பாதாம், வால்நட், இலை கீரைகள், வாழைப்பழம் இவை தினமும் சாப்பிடு.
உடல் உனக்கு எதிரி அல்ல. மிகப்பெரிய நண்பன். தினமும் உனக்காக போரிடுகிறது. தினமும் உன்னை காக்கிறது. தினமும் உன்னிடம் உதவி கேட்கிறது. கொஞ்சம் கவனி. கொஞ்சம் கேள். கொஞ்சம் அன்பு செலுத்து. அவ்ளோ தாங்க. இனி நீங்க தான் உங்க உடலுக்கு ராஜா.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


