இன்று (1.4.2026) பங்குனி உத்திரம். இந்த நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுவர். இந்த நாளில் ஒரு அறிவியலும் ஒளிந்துள்ளது. வாங்க பார்க்கலாம்.
பங்குனி உத்திரத்தில் வரும் பௌர்ணமி நிலவு பூமிக்கு மிக அருகில் இருக்கும். இதனால் மனிதர்களின் மனதில் ஒருவித படபடப்பு அல்லது குழப்பம் வரலாம். அதை சரிபண்ணத் தான் இந்த நேரத்தில் கோவிலுக்குக் கூட்டமாகப் போய் பஜனை பாடுவதும், தியானம் பண்ணி நம் மனதை ஒருமுகப்படுத்தும் நிலையையும் முன்னோர்கள் வைத்தனர்.
அதே போல வெயில் காலம் ஆரம்பிக்கிறதால உடல் சூட்டைத் தணிக்கவே பால் குடம் எடுப்பது, காவடி தூக்குவது, நீர் மோர், பானகம் கொடுப்பது என பல செயல்களைச் செய்தார்கள்.
வேரைக் காப்பாற்றினால்தான் மரம் செழிக்கும்னு சொல்வாங்க. அந்த வேர் தான் நம் குல தெய்வம். பங்குனி உத்திரம் என்பது உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் நாள். குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். இன்று கண்டிப்பாக உங்க குலதெய்வ கோவிலுக்குப் போங்க. அருகில் உள்ள கோவிலுக்குப் போய் முருகன், தெய்வானை திருக்கல்யாணத்தைப் பாருங்க.
அன்னதானம், நீர், மோர் கொடுப்பது கோடி புண்ணியத்தைத் தரும். இந்த நாளில் முருகனை மட்டும் ஏன் கொண்டாடுறாங்க? மற்ற தெய்வங்களுக்கு இது ஒரு திருமண நாள். முருகனுக்கு வெற்றித் திருநாள். சூரபத்மனை ஜெயிச்ச பிறகு இந்திரன் தனது மகள் தெய்வானையை மணமுடித்த நாள்.
காரைக்கால் அம்மையார் இறைவனின் திருநடனத்தைக் காண திருக்கைலாயத்துக்கு தலையால் நடந்து சென்ற பயணத்தின் நினைவாகவும் இந்த நாளில் சில கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



