பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா? பாஜகவில் இணைகிறாரா? கடும் அதிருப்தியில் பிடிஆர்? என்ன நடக்கும்?

திமுகவில் உள்ள சில மூத்த தலைவர்கள் தலைமை மீது அதிருப்தியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களில் ஒருவராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாத்தா பி.டி.…

ptr

திமுகவில் உள்ள சில மூத்த தலைவர்கள் தலைமை மீது அதிருப்தியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களில் ஒருவராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாத்தா பி.டி. ராஜன் நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவர். அவரது தந்தையார் பழனிவேல் ராஜன், மதுரை அரசியலின் பொற்காலமாக கருதப்பட்ட ஒரு காலகட்டத்தில் அரசியல் ஆளுமையாக விளங்கினார். இவர்கள் அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாத, பல நூறு கோடி சொத்துகளுக்கு அதிபதியான குடும்ப பின்னணி கொண்டவர்கள். இந்த பின்னணியில் இருந்து வந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தற்போது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தி.மு.க. ஆட்சியில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தற்போது கடுமையான அரசியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். பி.டி.ஆர். குரல் என்று கூறப்பட்டு வெளியான ஓர் ஆடியோ, “ரூ. 30,000 கோடி மகனும் மருமகனும் சுருட்டிவிட்டனர்” என்று பேசியதாக பரவியது. இந்த ஆடியோ தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோவின் நம்பகத்தன்மையை அவர் நிரூபிக்க வழக்கு தொடராதது ஒரு கேள்வியாகவே உள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவருக்கு இறங்குமுகம் ஏற்பட்டது. நிதித்துறை அமைச்சராக இருந்தவர், முதலில் வேறொரு துறைக்கு மாற்றப்பட்டார்.

தி.மு.க. அவரை பக்கவாட்டில் அமர வைத்து அவமானப்படுத்துகிறது என்றும், அவருக்கு அரசு நிகழ்வுகள், கட்சி நிகழ்வுகளுக்கு முறைப்படி அழைப்பு விடுப்பதில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது. பேனர்களில் கூட அவரது புகைப்படம் இடம்பெறுவதில்லை.

வெளிநாட்டில் வாழவே ஆர்வம் கொண்ட அவர், தந்தையின் மறைவுக்கு பிறகு அரசியலுக்குள் தள்ளப்பட்டவர். அவரது அரசியல் தாண்டிய சமூக புரிதல், டாஸ்மாக்கை நம்பி அரசை நடத்த கூடாது, இலவச திட்டங்களால் தமிழ்நாடு திவாலாகும் என்ற அவரது ஆலோசனைகள் முதல்வர் தரப்பால் ஏற்று கொள்ளப்படவில்லை.

பெரும்பாலான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கொள்கைகள், நிதி குறித்த அறிவார்ந்த பார்வைகள் ஆகியவை தி.மு.க.வுக்கு ஒவ்வாதவை. அரசியல் விமர்சகர்களின் பார்வையில், பா.ஜ.க.வே இவருக்கு பொருத்தமான கட்சி என்றும், அங்கு இவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் கருத்து நிலவுகிறது.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை டம்மி ஆக்கிவிட்டார்கள், உண்மையை பேசியதால் ஒதுக்கப்பட்டார்” என்ற அனுதாபம் உள்ளது. ஆனால், தொகுதி மேம்பாட்டில், குறிப்பாக அவர் வெற்றி பெற்ற 76-வது வார்டிலேயே சாக்கடை, குடிநீர், சாலைப் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பி.டி.ஆர். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்பதிலேயே சந்தேகம் உள்ளது. இதுகுறித்த எடுத்த கருத்துக்கணிப்பில் 38% பேர் போட்டியிட மாட்டார் என்றும், 35% பேர் மட்டுமே போட்டியிடுவார் என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.

அரசியல் ரீதியாக பி.டி.ஆர். மிகவும் மோசமாக அவமானப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர் மீண்டும் போட்டியிடுவாரா என்பதே மிகப்பெரிய கேள்வி. தி.மு.க. மீதான மக்களின் அதிருப்தி அதிகமாக உள்ளது. மதுரை மத்திய தொகுதி, பி.டி.ஆர். இல்லாத நிலையில், காங்கிரஸ் அல்லது தி.மு.க.வின் வேட்பாளருக்கும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி நிலவும், எளிதில் வெற்றி காண முடியாத தொகுதியாகவே இருக்கும் என்பதே கருத்துக்கணிப்பின் முடிவாக உள்ளது.