கேரளாவை கடவுளின் சொர்க்க பூமி, ‘கடவுளின் தேசம்’னு சொல்வாங்க. அந்த வகையில் இந்த கோடைக்கு ஏற்ற பல சுற்றுலா தலங்கள் அங்கு உள்ளன. வருடம் முழுவதும் உழைத்து உழைத்து ஓடா தேய்ந்து போனவங்க இந்த கொளுத்தும் கோடையில் கொஞ்சம் இதமாக சுற்றுலாத்தலங்களுக்குப் போய் வரலாம்.
மனதும், உடலும் கொஞ்சம் புத்துணர்ச்சி பெறும். ரிலாக்ஸா போய் என்ஜாய் பண்ணிட்டு வரலாம். அடுத்த ஓராண்டுக்கு நீங்க புத்துணர்ச்சியோடு புதுப்பொலிவோடு வேலை செய்யலாம். அப்படி நீங்க கேரளா போனா பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட் தான் இது.
மூணாறு
தேயிலைத் தோட்டங்களுக்குப் பெயர் பெற்ற இடம்தான் மூணாறு. இது கேரளாவில் மிக அழகான இடம். இந்த சம்மருக்கு நீங்க போகறதுக்கு ஏற்ற இடம்தான் இது.
ஆலப்புழா
கேரளாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று. கேரளாவிற்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் இங்கு வரத் தவறுவதில்லை. இங்கு போட் ஹவுஸ் மிகவும் பிரபலம்.
கொச்சி
கேரளாவின் பாரம்பரிய சுற்றுலாத் தலம். இங்கு சென்றால் கேரளாவின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இயற்கை எழில் சூழ்ந்த இடம் இது.
வயநாடு
நீர்வீழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்றது. கேரளா சுற்றுலா என்றாலே வயநாடு ஒரு முக்கியமான இடம். இங்குள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது.
பத்மநாபசுவாமி கோவில்
கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் உலம் முழுவதும் ஒரு தனித்துவமான அடையாளம் கொண்ட சுற்றுலாத்தலம். இங்கு ஸ்ரீவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு அக்டோபர் முதல் பிப்ரவரி வரை செல்ல உகந்த காலம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


