அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியபோது, பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து ஆழ்ந்த இரங்கலும், இந்தியாவுக்கு தனது முழுமையான ஆதரவும் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவுக்கு தற்காத்து கொள்ளும் உரிமை உண்டு என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா உறுதியாக இந்தியா பக்கம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களை உள்ளேயும் வெளியேயும் பயிற்றுவித்து, நிதி உதவி வழங்கி வருகிறது என்ற தகவலையும் ராஜ்நாத் சிங் பகிர்ந்தார். இதுபோன்ற தாக்குதல்களை உலக நாடுகள் சகிப்பில்லாமல் வெளிப்படையாக கண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க வெளியுறவு துறை சார்பிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பயங்கரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். பயங்கரவாதிகள் வெற்றி பெற்றார்கள் என்பது தவறான எண்ணம். இது மோடி அரசு, ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்,” என அவர் கூறினார்.
“ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் உரிய பதிலடி வழங்கப்படும். இந்த நாட்டின் ஒவ்வொரு இஞ்சிலும் பயங்கரவாதத்தை அழிக்கவே நாங்கள் உறுதி எடுத்துள்ளோம்,” என உறுதி கூறினார்.
மேலும், இந்த போரில் 140 கோடி இந்தியர்கள் மட்டுமல்ல, உலக நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும், பயங்கரவாதம் முழுமையாக அழியும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் அமித்ஷா வலியுறுத்தினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
