ஒரு காலத்தில் தமிழ்த்திரை உலகில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் பிரசாந்த். கடைசியாக விஜயுடன் கோட் படத்தில் நடித்து அசத்தினார். இவர் நடித்த முதல் படம் வைகாசி பொறந்தாச்சு. அப்பவே சக்கை போடு போட்டது. கல்லூரி இளசுகளை வாரி அணைத்துக் கொண்டது இந்தப் படம். தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகின.
உலக அழகி ஐஸ்வர்யா ராயே தமிழ்சினிமாவில் முதன் முதலாக பிரசாந்துடன் தான் ஜோடி சேர்ந்து அறிமுகமானார். அது ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படம். நல்ல ஜோடிப் பொருத்தம்னு கொண்டாடினாங்க. அந்த வகையில் பிரசாந்த் அம்மா சொன்ன ஒரு விஷயம் குறித்து பிரபலம் ஒரு தகவலைத் தந்துள்ளார். என்னன்னு பாருங்க.
பிரசாந்த் சார் எப்பவுமே காசு கொண்டு வர மாட்டார். ஒருமுறை அடையாறில் சூட்டிங் நடக்கும்போது ஜூனியர் ஆர்டிஸ்ட், அவங்க பொண்ணைக் கூட்டிட்டு வந்தாங்க. நான் ஸ்கூல் அனுப்பாம எதுக்கு பொண்ணை கூட்டிட்டு வந்தீங்கன்னு கேட்டேன். அவங்க ஃபீஸ் கட்ட பணம் இல்லை. அதனால தான் அனுப்பலன்னு சொன்னாங்க. நான் உடனே ஒரு 5 ஆயிரம் ரூபாய் பிரசாந்த் கையில கொடுத்து அந்தப் பொண்ணுக்கு கொடுக்க சொன்னேன்.
அப்புறம் வீட்டுக்குப் போன உடனே பிரசாந்த் அவங்க அம்மாகிட்ட இந்த விஷயத்தைச் சொன்னாரு. உடனே அவங்க அம்மா ரொம்ப சீரியஸாகி அவர் கையில் இருந்து யாருக்கும் காசு கொடுக்கக் கூடாது. லட்சுமி தேவி போயிடும். இனிமேல் அந்த மாதிரி பண்ணாதீங்க என்று எனக்கு வார்னிங் கொடுத்தாங்க என்கிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் புஜ்ஜி பாபு.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


