ஜம்மு & காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய சதித்திட்டதிட்டக்காரராக பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஹாஷிம் முஸா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் சிறப்பு சேவை குழு பாரா கமாண்டோவாக பணியாற்றியவர்.
முன்னணி உளவுத்துறை வட்டாரங்களின் தகவலின்படி, பாகிஸ்தான் ராணுவ பாரா கமாண்டோவாக இருந்த ஹாஷிம் முஸா, பின்னர் லஷ்கர்-இ-தயிபா அமைப்பில் சேர்ந்தார். இந்தியாவில் இந்த கொடூரமான தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்தியதற்கு பின்னால் இவர்தான் முக்கியமானவர். இதன் மூலம் மீண்டும் ஒரு முறை, பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக எல்லை கடந்த பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள், பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரிப்பதற்காக பொறுப்பேற்க வலியுறுத்தும் இந்தியாவின் சர்வதேச முயற்சிகள் வலுப்பெறும் நேரத்தில் வெளிவந்துள்ளன.
ஹாஷிம் முஸா, பாகிஸ்தான் சிறப்பு சேவை குழுவில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். ராணுவ சேவையை விட்டு வெளியேறிய பிறகு, அவர் லஷ்கர்-இ-தயிபா அமைப்பில் இணைந்தார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அங்கு இருக்கும் பாதுகாப்பு படைகள் ஆகியோரை குறிவைத்து தாக்கும் பணியை அவருக்கு ஒப்படைத்திருந்தனர்.
முந்தைய பயங்கரவாத சம்பவங்கள் 2024 அக்டோபரில் நடந்த கங்கன்கீர் மற்றும் பூட்டா பாத்ரி தாக்குதல்களிலும் ஹாஷிம் முஸாவின் பங்கு இருந்தது விசாரணை முகாம்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தாக்குதல்களில் இரண்டு இந்திய ராணுவ வீரர்களும், இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.
ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பால் திட்டமிடப்பட்ட ஒரு பெரிய பயங்கரவாதத் திட்டமும் வெளிப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் ஜம்மு & காஷ்மீரில் நிலவி வரும் அமைதியை சீர்குலைப்பதே ஆகும்.
உளவுத்துறை வட்டாரங்கள் கூறுவதாவது, ஐ.எஸ்.ஐ. ஆதரிக்கும் பயங்கரவாத அமைப்புகள், ஸ்ரீநகர் மற்றும் கந்தர்பால் பகுதிகளில் உள்ள வெளிநாட்டு மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள், போலீசார் மீது இலக்குக் குறி வைத்து தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 21, 2025 அன்று மாலை, பஹல்காம் தாக்குதலுக்கு முன் நாள், பந்திப்போராவை சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதி ஹாஷர் பர்ரே அலியாஸ் ஹம்சா மற்றும் ஓஜிடபி ஒருவர் பாராமுலா மாவட்டத்தில் உள்ள படான் ரயில்வே பாலங்களில் ஆயுதங்களுடன் சந்தேகமான முறையில் காணப்பட்டனர்.
வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பணியாற்றும் வெளிமாநில ரயில்வே ஊழியர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாக கூடியவர்களாக கருதப்படுகின்றனர். இதனால், அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக விரைவாக அதிகரிக்கப்படுகின்றன
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
