பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த நிலையில், தனது 60வது பிறந்தநாளில் தனது காதலியை அறிமுகப்படுத்தியதாகவும், அவரைத் தான் விரைவில் திருமணம் செய்யப் போவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல ஜோதிடர் ஒருவர், “அமீர்கானுக்கு மூன்றாவது திருமணம் ஏற்கனவே நடந்து விட்டது” என்று கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஜோதிடர், ஒரு இணையதளத்துக்குக் கொடுத்த பேட்டியில், “அமீர்கான் ஏற்கனவே ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியும். என்னைப் பொறுத்தவரை, அவரது பிறந்த நாள் மார்ச் 14 என்பதனால், அவர் தனது காதலியை அநேகமாக திருமணம் செய்திருக்க வேண்டும்.
ஒருவருடன் இணைந்து வாழ்வதும், அனைத்தையும் பகிர்ந்து கொள்வதும் உண்மையான உறவின் அடையாளம் என்பதால், எனது கணிப்பு சரியாக இருக்கும். அவரது மூன்றாவது திருமணம் ஏற்கனவே நடந்திருக்க வாய்ப்பு அதிகம். இது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான். அந்த பெண்ணின் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை. எனக்கு அமீர்கானை தனிப்பட்ட முறையில் தெரியாது; அவரது பிறந்த நாளை வைத்து நான் கணித்தேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அமீர்கான், பெங்களூரைச் சேர்ந்த கௌரி என்பவருடன் கடந்த சில மாதங்களாக காதலில் உள்ளார் என்றும், தனது அறுபதாவது பிறந்த நாளில் தனது நண்பர்களிடம் கௌரியை அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. கௌரி பெங்களூரில் வசிக்கிறார்; அவரது தாயார் தமிழர் மற்றும் தந்தை ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர். கௌரியின் தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என்றும், அமீர்கானுடன் நீண்ட நாள் நண்பராக இருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
