கார்த்திகை மாதத்தில் இத்தனை சிறப்புகளா? அப்படின்னா எதையுமே மிஸ் பண்ணிடாதீங்க!

By Sankar Velu

Published:

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து… என்ற பாடல் காதில் ஒலிக்கிறதா? ஆம். இன்று தான் கார்த்திகை முதல் நாள். கார்த்திகை மாதம் என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது மாதம் முழுவதும் விளக்கேற்றி வழிபடுவது தான்.

திருவண்ணாமலை

அப்புறம் திருவண்ணாமலை கார்த்திகை தீபம், அடுத்தது சபரிமலை, முருகன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து யாத்திரை செல்வது. இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இந்த மாதத்தில் வேறு என்னென்ன சிறப்புகள்னு பார்ப்போமா…

கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். கார்த்திகை மழையோட மட்டுமல்லாது இறை வழிபாட்டோடும் நிறைய தொடர்புடைய ஒரு அற்புதமான மாதம் இதை விளக்கிடும் மாதம் அப்படின்னு நம்முடைய பெரியோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

ஒளி வடிவம்

இறைவனை நாம் ஒளி வடிவமாக வழிபடக்கூடிய ஒரு அற்புதமான நாள் அமையக்கூடியது இந்த கார்த்திகை மாதத்தில் தான். இந்த கார்த்திகை மாதத்தில் நிறைய சிறப்புகள் இருந்தாலும் முதல் நாள் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப சிறப்பு.

shiva parvathi
shiva parvathi

தை பூசத்திற்கு பழனிக்கு நடை பயணமாக செல்லக்கூடியவர்கள் கார்த்திகை மார்கழி என்கின்ற இரண்டு மாதங்களும் முழுமையாக விரதம் இருந்து தை மாதத்தில அதாவது தைப்பூசத்துக்குன்னு இல்ல மார்கழியிலேயே நடக்க ஆரம்பிச்சிடுவாங்க.

மாலை போடுவாங்க

அப்படி பழனியை நோக்கி போறவங்க பல பேர் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முருகனுக்காக மாலை போடுவாங்க. அதேபோல எல்லோரும் எதிர்பார்க்கக்கூடியது சபரிமலை ஐயப்பனுக்கு போடக்கூடிய மாலை. கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப விரதத்தையும் நாம் துவங்குகிறோம்.

நாமங்களை பஜனையாக சொல்லி பாடி வழிபடக்கூடிய ஒரு நல்ல வழக்கத்தை கற்றுக் கொடுத்திருக்கக்கூடிய மாதம் அப்படின்னு சொல்லணும். பஜனைக்கு இன்னைக்கு பிள்ளைங்க வர்றது ரொம்ப குறைச்சல்.

பஜனை

ஆனா ஒரு காலத்துல பெரியவங்க சின்ன குழந்தைங்க எல்லாருமே இந்த கார்த்திகை மாதம் அங்க போய் உட்கார்ந்து தங்களுக்கு தெரிஞ்ச பாடல்களைப் பாடுவாங்க. நாமங்களை பஜனையாக சொல்லி பாடி வழிபடக்கூடிய ஒரு நல்ல வழக்கத்தை கற்றுக் கொடுத்திருக்கக்கூடிய மாதம் அப்படின்னு சொல்லணும்.

எளிமையாக பொரி, அவல், கடலை, வாழைப்பழம், தேங்காய் என எல்லாவற்றையும் வச்சு சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணலாம். கார்த்திகை சோமவார பஜனை சிறப்பு. சங்காபிஷேமும் மிகச் சிறப்பு.

சங்காபிஷேகம்

sangapishegamஅதனால குழந்தைகளை அழைச்சிட்டுப் போய் அதுல கலந்துக்க வைக்கலாம். சுவாமிக்கு வாரம் தோறும் திங்கள்கிழமை சங்காபிஷேகம் செய்வார்கள். இதை சோமவாரம்னு சொல்வாங்க. அன்றைய தினம் சிவன் கோவில்களுக்குச் சென்று அங்கு வரிசையாக வைக்கப்பட்டு இருக்கும் 108 சங்குகள், 1008 சங்குகளைப் பார்ப்பதே மிகச்சிறப்பு.

அதை வழிபட்டு சிவனையும் தரிசித்து விட்டு வருவது மிக உன்னதமான பலனைத் தரும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.