ஒரு கதாநாயகர் ஒரு படத்தில் தன்னுடைய திறமையைக் காட்டினாலே ரசிகர்கள் அப்படத்தைக் தூக்கிக் கொண்டாடி விடுவர். அப்படி இருக்கையில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இமாலய வெற்றியைக் கொடுத்திருக்கின்றனர் தமிழ் சினிமாவின் முன்னாள் ஜாம்வான்களான எம்.ஜி.ஆரும், சிவாஜியும். தமிழ் சினிமா வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் ஒருவரே டபுள் ஆக்ட் ரோலில் நடித்து சாதனை புரிந்தவர்கள் இவர்கள் மட்டுமே.
ரஜினி, கமல் கூட வெகு சில படங்களே இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். ரஜினிக்கு ராஜாதி ராஜா, முத்து, எந்திரன், 2.0, போன்ற படங்கள் இமாலய வெற்றியைக் கொடுத்தது. கமலுக்கு மைக்கேல் மதன காமராசன், இந்தியன், அபூர்வ சகோதரர்கள், காக்கிச் சட்டை, ஆளவந்தான், தசாவதாரம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
அந்த வகையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோ நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு, கலையரசி, அரசிளங்குமரி, ஆசைமுகம், எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண், நீரும் நெருப்பும், நாளை நமதே, நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், உலகம் சுற்றும் வாலிபன், ஊருக்கு உழைப்பவன், நினைத்ததை முடிப்பவன், பட்டிக்காட்டு பொன்னையா என 17 படங்களில் எம்ஜிஆர் இரட்டை வேடம் போட்டு அசத்தியுள்ளார்.
இவற்றில் நாடோடி மன்னன், எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண், நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் ஆகிய படங்கள் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளன.
படத்தின் வெற்றி விழாவில் ஆட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேவர்.. இப்படி ஒரு Pet Lover -ஆ?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த இரட்டை வேடப்படங்கள் மொத்தம் 21. அவை, உத்தமபுத்திரன், அன்னையின் ஆணை, சரஸ்வதி சபதம், எங்க ஊர் ராஜா, கௌரவம், எங்கள் தங்க ராஜா, சிவகாமியின் செல்வன், என் மகன், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், என்னைப் போல் ஒருவன், புண்ணிய பூமி, பட்டாக்கத்தி பைரவன், எமனுக்கு எமன், விஸ்வரூபம், மாடிவீட்டு ஏழை, சங்கிலி, தியாகி, சந்திப்பு, வெள்ளை ரோஜா, ரத்த பாசம்.
இவற்றில் உத்தமபுத்திரன், சரஸ்வதி சபதம், கௌரவம், எங்கள் தங்க ராஜா, என் மகன், விஸ்வரூபம், சந்திப்பு, வெள்ளை ரோஜா ஆகிய 8 படங்கள் 100 நாள்களைக் கடந்து ஓடியவை.
எனினும் எம்ஜிஆர் படங்கள் தான் அதிக வெற்றியைக் குவித்துள்ளது. அவர் 17 படங்களில் நடித்து விட்டு 9 படங்களை வெற்றிப்படமாக்கி உள்ளார். சிவாஜி 21 படங்களில் நடித்தும், 8 படங்களில் தான் வெற்றியைக் கொடுத்துள்ளார்.