படத்தின் வெற்றி விழாவில் ஆட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேவர்.. இப்படி ஒரு Pet Lover -ஆ?

ஒரு சில படங்களைப் பார்த்தால் இப்படம் யாருடைய ஸ்டைல் என்று கண்டிப்பாக யூகிக்க முடியும். இப்போதுள்ள இயக்குநர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றி வரும் வேளையில் தனது படங்களில் இயக்குநர் ராமநாராயணனுக்கு முன்னோடியாக விலங்குகளை நடிக்க வைத்து அவற்றிற்கும் சினிமாவில் அங்கீகாரம் கொடுத்தவர் சின்னப்ப தேவர். அப்படி இவர் தயாரிப்பில் வந்த ஒரு படத்தில் நடித்த ஆட்டுக்கிடாவிற்கு வெற்றி விழாவில் மாலை அணிவித்து தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார் இந்த Pet Lover.

அப்படி தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம்தான் ஆட்டுக்கார அலமேலு. 1977-ல் தியாகராஜன் இயக்கத்தில் சிவக்குமார், ஸ்ரீ பிரியா உள்ளிட்ட பலர் நடித்த இப்படமானது 25 வாரங்களுக்கு மேல் திரையில் ஓடி சாதனை படைத்தது.

விளம்பரமே இல்லாமல் வந்து இந்திய சினிமாவையே புரட்டிப் போட்ட படம்.. ரஜினி முதல் அஜீத் வரை நடித்து ஹிட் ஆன ரகசியம்

சங்கர்-கணேஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆக அன்று வானொலிகளிலும், மைக்செட்களிலும் ஒலித்து பிரபலமானது. இப்படத்தில் நடிகர்களுக்கு ஈடாக ஆட்டுக்கிடா ஒன்று நடித்திருக்கும். மேலும் படத்தின் வெற்றிக்கும் இந்த ஆட்டின் நடிப்பு பெரும் பங்கு வகித்தது. இவ்வாறு கலைஞர்களுக்கு ஈடாக, தம் பெரும்பாலான படங்களில் முழுக்கதையிலும் வரும் வகையில் விலங்கு களை நடிக்க வைத்த முதல் தயாரிப்பாளர் இவர்தான்.

‘ஆட்டுக்கார அலமேலு’ படத்திற்கான வெற்றிவிழாவில், மற்ற கலைஞர்களுக்கு ஈடாக அதில் நடித்த ஆட்டுக்கும் வெற்றிமாலையை சூட்டி அசத்தினார். விலங்குகள் மீது அவருக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம். தம் வீட்டில் சில விலங்குகளையும் வளர்த்து வந்தார் சின்னப்ப தேவர். மேலும் நல்ல நேரம் படத்தில் யானைகளை வைத்து சர்க்கஸ் விளையாட விட்டிருப்பார். அதேபோல் அன்னை ஓர் ஆலயம் படத்திலும் சிறுத்தை, யானை, நாய் உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் நடிக்க வைத்திருப்பார்.

மேலும் தேவர் படப்பிடிப்புகளில் அவற்றை வெறும் விலங்குகள் போல அலட்சியமாக நடத்தாமல் உணவு, ஓய்வு என்று சக மனிதர்களுக்குண்டான மதிப்புடன் அவற்றை நடத்துவார். மேலும் படம் முடியும் தருவாயில் அந்த விலங்குகள் தேவருக்கு நெருங்கிய நண்பனாக மாறிவிட்டிருக்கும்.

எம்.ஜி.ஆர்- தேவர் காம்பினேஷனில் உருவான முதல்படமான தாய்க்குப் பின் தாரம் படத்தில் கம்புச்சண்டை காட்சியில், ’’நீங்களே எங்கூட நடிங்க, வேற ஆளு வேணாம்’’ என்று எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதை அடுத்து, இருவரும் தினமும் சிலம்பம் சுற்றினார்கள். படத்தின் டெக்னீஷியன்களே விசில் அடித்து ஆரவாரம் செய்தார்கள்.

அந்த ஒரு சண்டைக்காட்சிக்காகவே அந்தப்படம் வசூலை அள்ளும் என்று தெரிந்திருந்தும், கூடுதலாக எம்.ஜி.ஆரை உயர்த்திக்காட்ட எண்ணிய தேவருக்கு உதயமான இன்னொரு யோசனைதான் ஜல்லிக்கட்டு. அதுவரை யாராலும் அடக்க முடியாத காளையைத் தானே தேடிப்பிடித்துக் கொண்டு வந்து, பிரம்மாண்டமான செட்டில் எம்.ஜி.ஆரை வைத்து ஜல்லிக்கட்டு காட்சியை படமாக்கி அப்போதே திரையில் ரசிகர்களைச் சீட்டின் நுனியில் உட்கார வைத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...