Ajithkumar: 1992 ஆம் வருடம் பிரேம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் அஜித் குமார். 1993 ஆம் வருடத்தில் தமிழில் அமராவதி என்ற படத்தில் அறிமுகமானார்.
அன்று முதல் துணிவு வரை பல படங்களில் அஜித் குமார் நடித்துள்ளார். அதோடு அல்டிமேட் ஸ்டார் ஏகே என்று அவருக்கு தனி ரசிகர் பட்டாளுமே உள்ளது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அஜித் திரை உலகில் பல சோதனைகளை பார்த்துள்ளார்.
அஜித் அன்னிக்கு அப்படி சொன்னார்.. அதான் நான் இங்கே இருக்கேன்.. ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல்..!!
தமிழில் முதல் படமான அமராவதி அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதேபோன்று அடுத்தடுத்து நடித்த ராஜாவின் பார்வையிலே, பாசமலர்கள் போன்ற படங்களும் அவருக்கு தோல்வியை தான் கொடுத்தன.
இப்படி பல தோல்வி படங்களையும் அஜித் சந்தித்துள்ளார். ஆனால் இப்போது அஜித்குமார் பிரபல நடிகராக உச்சத்தில் இருக்கிறார். அவர் பல வெற்றி படங்களை கொடுத்த பிறகும் நடிப்பில் அவருக்கு இருந்த ஈடுபாடு என்பது பாராட்டும் விதமாகவே இருந்துள்ளது.
இது குறித்து கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த திரைப்படம் வரலாறு. இந்த படப்பிடிப்பு சமயத்தில் அஜித் பிரபல நடிகராக இருந்ததால் ஏராளமான படங்களில் நடித்து வந்துள்ளார்.
ஒரு படத்திற்காக கெஞ்சிய அஜித்.. இப்போ ரசிகர்களின் அல்டிமேட் ஸ்டார்.. திறமையால் உயர்ந்த AK..!!
இந்நிலையில் வரலாறு திரைப்படத்தை முடித்துவிட்டு தான் மற்ற படங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலைக்கு அஜித்குமார் தள்ளப்பட்டுள்ளார். இதனால் கே எஸ் ரவிக்குமாரிடம் படத்தை எடுத்து முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என கேட்டுள்ளார்.
அப்போது கே எஸ் ரவிக்குமாறும் 15 நாள் தேவை என்று கூற அஜித் தன்னால் உண்மையாகவே அத்தனை நாட்கள் தர முடியாது ஒரு வாரம் தருகிறேன் அதற்குள்ளாக முடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அப்போது கே எஸ் ரவிக்குமாறும் 15 நாள் எடுக்க வேண்டிய படத்தை எப்படி ஏழு நாட்களில் எடுப்பது என்று சந்தேகமாக கேட்டுள்ளார். அதற்கு அஜித் இரவு பகல் என்று எடுக்கலாம் என கூறியுள்ளார்.
அஜித்தின் உடல்நிலை.. கண்ணீர் சிந்திய விஜயகாந்த்.. என்ன நடந்தது தெரியுமா..?
இதை கேட்டு தயங்கிய கேஸ் ரவிக்குமார் உங்கள் நலனையும் யோசிக்க வேண்டும் அல்லவா என்று கூற, அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு ஏழு நாட்களாக இரவு பகல் பாராமல் நடித்துக் கொடுத்துள்ளார். அந்த அளவிற்கு அஜித்குமாருக்கு நடிப்பில் ஈடுபாடு உண்டு என்பதை கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.