ஒரு படத்திற்காக கெஞ்சிய அஜித்.. இப்போ ரசிகர்களின் அல்டிமேட் ஸ்டார்.. திறமையால் உயர்ந்த AK..!!

Ajith Kumar: 1992 ஆம் வருடம் பிரேம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் அஜித் குமார். 1993 ஆம் வருடத்தில் தமிழில் அமராவதி என்ற படத்தில் அறிமுகமானார். அன்று முதல் துணிவு வரை பல படங்களில் அஜித் குமார் நடித்துள்ளார்.

அதோடு அல்டிமேட் ஸ்டார் ஏகே என்று அவருக்கு தனி ரசிகர் பட்டாளுமே உள்ளது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அஜித் திரை உலகில் பல சோதனைகளை பார்த்துள்ளார். தமிழில் முதல் படமான அமராவதி அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

அஜித்தின் உடல்நிலை.. கண்ணீர் சிந்திய விஜயகாந்த்.. என்ன நடந்தது தெரியுமா..?

அதேபோன்று அடுத்தடுத்து நடித்த ராஜாவின் பார்வையிலே, பாசமலர்கள் போன்ற படங்களும் அவருக்கு தோல்வியை தான் கொடுத்தன. இப்படி பல தோல்வி படங்களையும் அஜித் சந்தித்துள்ளார். இப்போது கொண்டாடப்படும் சிறந்த நடிகர் ஒரு காலத்தில் தயாரிப்பாளரிடம் ஒரு படத்திற்காக கெஞ்சி இருக்கிறார் என்பது நிசப்தமான உண்மை.

1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் அஜித் குமாருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு பைக் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்ட போது விபத்தில் சிக்கி அவரது முதுகில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

தன்னையே ஏளனமாய் நினைத்த காமெடி நடிகர்… அவருக்காக கை கொடுத்த அஜித்… பின்ன தலனா சும்மாவா?

இதனால் மிகுந்த வேதனைக்கு ஆளானார். அதையும் தாண்டி அவர் படங்களில் நடிக்கவும் செய்தார். ஆனால் அவ்வப்போது அவருக்கு முதுகு வலி ஏற்பட்டு ஓய்வு எடுத்து எடுத்து நடித்து வந்தார். 1999 ஆம் ஆண்டு வெளியான ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த சமயத்தில் அதிகப்படியான முதுகு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆனந்த பூங்காற்றே திரைப்படம் தொடர்பான விளம்பரம் வெளியான போது அதில் அஜித் குமாரின் பெயர் நீக்கப்பட்டு வேறொரு நடிகரின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ந்து போன அஜித் படத்தின் தயாரிப்பாளரிடம் வந்து தனது பெயரை எடுத்து விட்டால் வாழ்க்கையே போய்விடும் என்று கெஞ்சி கேட்டுள்ளார்.

அந்த அஜித் பட கதையில நீங்க நடிக்குறீங்களா.. நல்லாவே இருக்காது.. ரஜினியிடம் நேரடியாக சொன்ன பிரபல இயக்குனர்..

அதன் பிறகு தான் அந்த தயாரிப்பாளர் மீண்டும் அஜித் பெயரை சேர்த்துள்ளார். அந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாகவே பார்க்கப்பட்டது. இப்படி ஒரு காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்த அஜித் குமார் தான் தற்போது அல்டிமேட் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.