அஜித்தின் உடல்நிலை.. கண்ணீர் சிந்திய விஜயகாந்த்.. என்ன நடந்தது தெரியுமா..?

Ajith-Vijayakanth: விஜயகாந்த் சினிமாவில் இருந்த போதும் சரி, அரசியலிலும் சரி பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது சங்கம் கடனில் தத்தளித்துள்ளது.
இதனை தெரிந்து கொண்ட விஜயகாந்த் நடிகர் நடிகைகளை ஒன்று திரட்டி சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். அதன் மூலம் நிதி திரட்டி நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார்.

தன்னையே ஏளனமாய் நினைத்த காமெடி நடிகர்… அவருக்காக கை கொடுத்த அஜித்… பின்ன தலனா சும்மாவா?

இந்த கலை நிகழ்ச்சியில் பிரபல நடிகர் அஜித் பங்கேற்கவில்லை. ஆனால் அதன் பிறகு ஒருநாள் அஜித் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த அளவு பணம் கொடுத்துள்ளார். அப்போது மிகவும் கோபப்பட்ட விஜயகாந்த் அஜித்திடம் ஏன் மதுரைக்கு வரவில்லை என்று திட்டி கடுமையாக பேசியுள்ளார்.
உடனடியாக அஜித் தனது சட்டையை கழற்றி தனது முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை காட்டியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகாந்த் என்ன தம்பி இவ்வளவு கஷ்டத்துடன் தான் இருக்கிறாயா என கேட்டுள்ளார்.

இப்படி ஒரு மனிதரா..? பட்டினியில் வாடிய பிரபலங்கள்.. ரயிலை நிறுத்தி விஜயகாந்த் செய்த செயல்..!!

அதற்கு அஜித் என்னை நம்பி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் படம் எடுக்கிறார்கள் அதற்காக நான் வேதனைகளை தாண்டி நடித்துக் கொடுத்து விடுவேன். அதன் பிறகு நான் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டேன். அதற்கு காரணம் இதுதான் என கூறியுள்ளார்.
அதோடு படப்பிடிப்பு தளத்திலுமே ஒவ்வொரு காட்சிகள் படப்பிடிப்பு முடிந்ததும் தான் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறியுள்ளார் இதனைக் கேட்டு விஜயகாந்த் கண்ணீர் சிந்தியதோடு அஜித்திடம் பணம் வேண்டாம் எடுத்துச் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.

விஜய், அஜித்னா ஓகே.. விக்ரம்-னு சொன்னதும் தெறித்து ஓடிய திரிஷா!

ஆனால் அஜித் அந்த பணத்தை நிதி உதவியாக கொடுத்துவிட்டு சென்றார். ஒரு கட்டத்தில் அஜித் கலை நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு விஜயகாந்த் ஒன்றும் கேட்கவில்லை என்று பேச்சுவந்த போது தான் விஜயகாந்த் அந்த தம்பி எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது தெரியுமா என நடந்ததை கூறியுள்ளார்.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.