இஷ்டமே இல்லாமல் இளையராஜா கொடுத்த இசை… ஆனால் சூப்பர் ஹிட் ஆனது எப்படி தெரியுமா?…

By Amutha Raja

Published:

தமிழ் சினிமாவில் பல வித இசை ஜாம்பவான்கள் உண்டு. ஒரு சிலரின் இசைகள் அவர்கள் வாழ்நாட்களையும் தாண்டி அவர்களின் புகழை பாடும். அந்த வகையில் இசையால் ரசிகர்கள் அனைவரையும் கட்டிபோட்டவர் இசையமைப்பாளர் இளையாராஜா.

இவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கூறலாம். அந்த அளவு தனது இசையின் மூலம் சினிமாவை வேறு இடத்திற்கு கொண்டு சென்றவர். ரஜினி, கமல், மோகன் என பல முன்னணி நடிகர்களின் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்தவர்.

ஒரு சிறுகதையால் அதிகம் ஈர்க்கப்பட்டேன்.. அதுதான் இந்த படம்.. அகத்தியன் பகிர்ந்த தகவல்!

இவரின் பாடலாலேயே அப்படம் வெற்றி பெறும் கதையும் உண்டு. ராமராஜன் போன்ற பல நடிகர்களின் வளர்ச்சிக்கு இவரின் பாடகளும் ஒரு காரணம். இவர் இசையில் வல்லவர் என்றால் நடிப்பில் வல்லவர் நடிகர் சிவாஜி கணேசன்.

இவர் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்று பாரதிராஜா இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை. இப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிகை ராதா, சத்யராஜ் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

வாலியில் சிம்ரன் ரோலிலேயே நான் தான் நடிக்கணும்.. மும்பைக்கு ஏன் போனேன்.. ஜோதிகா சொன்ன பதில்!

இப்படத்திற்காக பாரதிராஜா இளையராஜாவிடம் இசையமைத்து தரும்படி கேட்டுள்ளார். பின்னர் படத்தின் மொத்த கதையையும் கேட்ட இளையராஜாவிற்கு அப்படத்தின் கதை பிடிக்கவில்லையாம். சில திருத்தங்களையும் அப்படத்தின் கதையில் செய்ய சொல்லியுள்ளார். ஆனால் பாரதிராஜா அவர் பேச்சை கேட்கவில்லையாம்.

ஆனால் பாரதிராஜா கேட்டு கொண்டதனால் இளையராஜா அப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அப்போது ராதாவும் சிவாஜியும் சந்திக்கும் உணர்ச்சிபூர்வமான காட்சிக்கு இளையராஜா சிறப்பாக இசையமத்தாராம். அதை கேட்ட பாரதிராஜாவிற்கு உடனே கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டதாம்.. என்னதான் இளையராஜாவுக்கு அப்படத்திற்கு இசையமைக்க விருப்பம் இல்லாவிட்டாலும் அப்படத்திற்கு சிறப்பான முறையில் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு மனிதரா..? பட்டினியில் வாடிய பிரபலங்கள்.. ரயிலை நிறுத்தி விஜயகாந்த் செய்த செயல்..!!