ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்! தளபதி 69 படத்தின் மாஸ் அப்டேட் இதோ!

தமிழ் நாட்டின் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது அடுத்தடுத்து படங்களிலும், அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த ஆண்டு மட்டும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ என இரண்டு சூப்பர் ஹிட்…

thalapathy 69 movie director update 1280x720 1

தமிழ் நாட்டின் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது அடுத்தடுத்து படங்களிலும், அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த ஆண்டு மட்டும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி வெற்றியை கொடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது தளபதி 68 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கம் இந்த படத்தின் சூட்டின் அசுர விதத்தில் நடைபெற்று வருகிறது. தளபதி 68 படத்தில் மொத்த படப்பிடிப்புகளும் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களுக்குள் முடிந்து விடும் என சொல்லப்படுகிறது. அதனால் இப்போது இருந்தே தனது அடுத்த படம் குறித்து தளபதி விஜய் கவனத்துடன் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதாவது தளபதி 69 படத்திற்கான கதை கேட்டு வந்த விஜய் தற்போது இயக்குனர் யார் என்பதையும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக தளபதி 69 படத்தை அஜய் இயக்குனர் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜய்க்கு பதிலாக கார்த்திக் சுப்புராஜ் தான் தளபதி 69 படத்தை இயக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜின். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸின் நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருந்தது.

இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது அப்போதே விஜய்யிடம் ஒரு கதை சொல்லி இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதன்படி கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் அதனால் அவர் தளபதி 69 படத்துக்கு ஓகே என கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பீஸ்ட் படத்துக்கு பின்னர் விஜய் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. முக்கியமாக ஜவான் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் விஜய் குறித்து அட்லி பேசியதை சன் பிக்சர்ஸ் எடிட் செய்து டெலிகாஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் வேட்டையன் படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் குறித்த மாஸ் அப்டேட்?

இதனால் இனி சன் பிக்சர்ஸ் பேனரில் விஜய் நடிக்க மாட்டார் என பல தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்றும் தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விஜய் கார்த்திக் சுப்புராஜ் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் தளபதி 69 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியான தகவல் வெளியாகும் வரை தளபதி ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.