ஒரு சிறுகதையால் அதிகம் ஈர்க்கப்பட்டேன்.. அதுதான் இந்த படம்.. அகத்தியன் பகிர்ந்த தகவல்!

தமிழ் திரை உலகின் இயக்குனரும் நடிகருமான அகத்தியன் கதை எழுதுவதில் வல்லவர். ஆரம்பத்தில் 100 ரூபாய்க்கு இவர் கதை எழுதி கொடுத்ததாக கூறப்படுவதுண்டு. அதேபோன்று தொடக்கத்தில் இவர் இயக்குனராக வந்த போது பல கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

அது எதையும் பொருட்படுத்தாமல் தனது விடாமுயற்சியால் இவர் இயக்கிய திரைப்படம் காதல் கோட்டை. இந்த படம் இவருக்கு நான்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. அதேபோன்று இவர் பல படங்களுக்கு கதை எழுதியுள்ளார். அதில் ஒன்று பொண்டாட்டி ராஜ்ஜியம்.

கோகுலத்தில் சீதை.. கார்த்திக் நடிக்க மாட்டேன்னு சொன்ன கதையா..? இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!

1992 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியானது பொண்டாட்டி ராஜ்ஜியம் திரைப்படம். இந்த படத்தில் சரவணன், ரஞ்சிதா இயக்குனர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் தேவா இசை அமைத்திருப்பார்.

இந்த படத்தின் கதைப்படி நடிகர் சரவணன் தனது நண்பன் விபத்தில் இறந்து விட நண்பனின் மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து வருவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சந்தேகம் சண்டைகள் இறுதியில் எப்படி உண்மை தெரிய வந்தது என்பதுதான் கதை.

பொட்டிக்கடை வச்சு பொழைச்சுக்கோ… கேலி செய்த திரையுலகம்… தேசிய விருது வாங்கிய இயக்குனர் அகத்தியன்…!!

இந்நிலையில் பேட்டி ஒன்றில் தான் எழுதிய கதைகளில் பொண்டாட்டி ராஜ்ஜியம் படத்தின் கதை மட்டும் ஒரு சிறுகதையால் ஈர்க்கப்பட்டு எழுதியதாக பகிர்ந்துள்ளார். வார பத்திரிக்கையில் உஷா சுப்ரமணியம் என்கிற எழுத்தாளர் எழுதிய கதை தான் அது.

அந்த கதை படி ஒரு நபர் கடற்கரையில் அமர்ந்திருந்த போது ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ள முயல்வார். அப்போது அந்த பெண்ணிடம் விசாரித்த போது தான் காதலித்தவனால் ஏமாற்றப்பட்டதாகவும் தனது வயிற்றில் குழந்தை வளர்வதாகவும் கூறுவார்.

அந்த அஜித் பட கதையில நீங்க நடிக்குறீங்களா.. நல்லாவே இருக்காது.. ரஜினியிடம் நேரடியாக சொன்ன பிரபல இயக்குனர்..

உடனே அந்த நபர் தன்னுடன் அந்தப் பெண்ணை அழைத்து செல்வது போன்று கதை இருக்கும். ஒரு சிறுகதையால் ஈர்க்கப்பட்டு தான் எழுதிய ஒரே கதை அது பொண்டாட்டி ராஜ்ஜியம் திரைப்படத்திற்கு தான் என அகத்தியன் பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...