வாலியில் சிம்ரன் ரோலிலேயே நான் தான் நடிக்கணும்.. மும்பைக்கு ஏன் போனேன்.. ஜோதிகா சொன்ன பதில்!

நடிகை நக்மாவின் தங்கையான ஜோதிகா ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. விஜய் மற்றும் ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் ஜோதிகா அறிமுகமானார்.

இயக்குனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் முதலில் சிம்ரனுக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தன்னிடம் தான் எஸ் ஜே சூர்யா அணுகினார் என்றும் அப்போதுதான் இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என கூறி விட்டதாக ஜோதிகா தற்போதைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வாலி படத்தில் சிம்ரன் ரோலில் ஜோதிகா:

அதன் பின்னர் ஒரு சிறிய கதாபாத்திரம் உள்ளது அதையாவது செய்வீங்களா எஸ் ஜே சூர்யா தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் அந்த ரோலில் நடித்திருந்தேன். அடுத்து குஷி படத்தை சொல்லவே வேண்டாம் எஸ். ஜே சூர்யா அவ்வளவு சிறப்பாக இருப்பார் என்றார்.

நடிகை ஜோதிகா சினிமாவை விட எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை மீது தான் அதிக ஆர்வம் எப்போதுமே இருந்தது. சினிமாவுக்கு வர வேண்டும் என்றெல்லாம் விரும்பவில்லை, அப்பா தயாரிப்பாளர் என்பதால் 12-ம் வகுப்பு படித்து இருந்த போது எனக்கு வந்து ஆஃபர் பற்றி வீட்டில் சொன்னார்கள், அக்கா நக்மாவும் ஏற்கனவே சினிமாவில் பெரிய ஸ்டாராக உள்ள நிலையில் முயற்சித்துப் பார்க்கலாமே என்ன நடிக்க வந்ததுதான். ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு விஷயத்தை புதிது புதிதாக கற்றுக் கொண்டு வருகிறேன் என ஜோதிகா செம க்யூட்டாக கோபிநாத்தின் பேட்டியில் பேசியுள்ளார்.

மும்பைக்கு குடிபுகுந்தது ஏன்?

தங்கள் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் சிவகுமார் மற்றவர்களை விட சினிமாவில் நான் நடிக்க ரொம்பவே சப்போர்ட் செய்தது வந்தார் என்றும் சமீபத்தில் மம்முட்டியுடன் இணைந்து நான் நடித்த காதல் தி கோர் படத்தை தனது நண்பர்களுக்கு எல்லாம் தனி ஷோவாக போட்டுக் காட்டி ரசித்து பார்த்தார் என ஹேப்பியாக சொன்னார்.

சென்னையில் பல ஆண்டுகள் ஒரே கூட்டு குடும்பமாக இருந்து வந்த ஜோதிகாவும் சூர்யாவும் திடீரென மும்பைக்கு சென்றது ஏன் என்கிற கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, தனது பெற்றோர்களின் உடல்நிலை கொரோனா காலத்தில் சரியாக இல்லாத நிலையில் மனசு ரொம்பவே கஷ்டமாகிவிட்டது. கடைசி காலத்தில் அப்பா அம்மாவை கொஞ்சம் பார்த்துக் கொண்டிருக்கலாமே என நினைத்தேன். அது சூர்யா மற்றும் வீட்டாரிடம் சொன்னதும் அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் மும்பைக்கு சென்று விட்டோம் என தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜோதிகா.

மம்மூட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்த காதல் தி கோர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் முயற்சியில் ஜோதிகா தீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.