இயக்குனர் ஷங்கர் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் முதலமைச்சரின் மகனை காதலித்த நிலையில் முதலமைச்சர் அவரை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும் அதன் பின் சமாதானம் செய்து திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் ஹரிணி என்ற கேரக்டரில் அறிமுகமானார் நடிகை ஜெனிலியா. அந்த படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து விஜய் நடித்த சச்சின், பரத் நடித்த சென்னை காதல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஒரு காட்சியை கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்த ‘திரிசூலம்’.. சிவாஜியின் 200வது படம்..!
இதனை அடுத்து ஜெனிலியாவுக்கு பெயர் வாங்கி கொடுத்த திரைப்படம் என்றால் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’. இந்த படத்தில் அவர் ஹாஷினி என்ற கேரக்டரில் இயல்பாக நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதனை அடுத்து தனுஷ் உடன் உத்தமபுத்திரன், மீண்டும் விஜய்யுடன் வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தார். அதே நேரத்தில் அவர் ஹிந்தி மற்றும் மராத்திய மொழிகளிலும் சில படங்கள் நடித்தார்.
இந்த நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் என்பவரின் மகனும் நடிகரமான ரித்தீஷ் தேஷ்முக் என்பவரை ஜெனிலியா காதலித்தார். இந்த காதலுக்கு ரித்தீஷின் தந்தை தேஷ்முக் சம்மதம் தர மறுத்ததாக கூறப்பட்டது.
இதனை அடுத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ரித்தீஷ் தனது தந்தையாரை சமாதானப்படுத்தி ஜெனிலியாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. நடிகை ஜெனிலியாவின் திருமணம் கடந்த 2012ஆம் தேதி பிப்ரவரி 3ஆம் தேதி இந்து முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தே படங்கள்.. கே பாலசந்தர் – இளையராஜா இணைந்த கடைசி படம்.. ஈகோவால் பிரிவா?
இந்த தம்பதிக்கு ரியான் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் ஜெனிலியா ஹிந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போதுகூட அவர் ஜூனியர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ரித்தீஷ் தேஷ்முக் இப்போதும் பாலிவுட்டில் பிரபல நடிகராக உள்ளார்.
51 வயது முன்னாள் முதலமைச்சரை திருமணம் செய்து கொண்ட 24 வயது தமிழ் நடிகை..!
மிகவும் இயல்பான கேரக்டர், குறிப்பாக அப்பாவி பெண் கேரக்டர் என்றால் உடனே ஜெனிலியாவை கூப்பிடுங்கள் என்ற அளவுக்கு அவர் அந்த கேரக்டரில் மிகவும் இயல்பாக நடிப்பார் என்பதும் அவரது நடிப்பு ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.