ஒருதலை ராகம் ரவீந்தரை ஞாபகம் இருக்கின்றதா? இப்போது அவர் ஒரு தொழிலதிபர்..!

By Bala Siva

Published:

டி.ராஜேந்தரின் ‘ஒருதலை ராகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நடிகர் ரவீந்தர். இவர் தற்போது கேரளாவில் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரவீந்தர் என்றால் உடனே அவருடைய சுருள் முடி, வித்தியாசமான வசன உச்சரிப்பு, பிரமாதமான டிஸ்கோ டான்ஸ் என்பது 90களின் கிட்ஸ்களுக்கு தெரியும். ‘ஒருதலை ராகம்’ படத்திற்கு பின்னர் அவர் பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தார்.

தமிழில் முதல்முறையாக ஒரு கல்லூரி கதை.. ஒரு தலை ராகம் படத்தின் வெற்றிக்கதை..!

பல படங்களில் கமல், ரஜினிக்கு வில்லனாகவும், சில படங்களில் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்துள்ளார். கண் சிவந்தால் மண் சிவக்கும், வாழ்க்கை, வீட்டுக்கு ஒரு கண்ணகி, குற்றவாளிகள், இரவு பூக்கள், விடிஞ்சா கல்யாணம், பேர் சொல்லும் பிள்ளை, பாட்டு வாத்தியார் உள்ளிட்ட படங்களில் குணசத்திர வேடங்களில் அவர் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் அவர் சென்னை மற்றும் புனேவில் நடிப்புக்கான பயிற்சியை பெற்ற பின்னரே நடிக்க வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டி.ராஜேந்தரின் ‘வசந்த அழைப்புகள்’ என்ற படத்தில் ரவீந்தர் ஜோடியாக டி.ராஜேந்தரின் மனைவி உஷா நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசனுடன் வாழ்க்கை என்ற படத்தில் நம்பியாரின் மருமகனாகவும் சில்க் ஸ்மிதா ஜோடியாகவும் நடித்திருப்பார். ரஜினியுடன் ரங்கா, போக்கிரி ராஜா, தங்க மகன், அடுத்த வாரிசு என ஒரு சில படங்களிலும், கமல்ஹாசனுடன் சகலகலா வல்லவன், பேர் சொல்லும் பிள்ளை, ராம் லட்சுமண் உள்ளிட்ட படங்களிலும் இவர் நெகட்டிவ் வேடத்தில் நடித்திருக்கிறார். கமல்ஹாசனின் ‘காக்கி சட்டை’ படத்தில் மட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி வேண்டாம்… புதுமுகங்களை வைத்து தரமான படங்கள்… சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர்..!

இவரை ரசிகர்கள் 80களின் பிரபுதேவா என்று கூறுவார்கள். பல படங்களில் அவர் டிஸ்கோ டான்ஸ் பாடல்களுக்கு நடனமாடி உள்ளார்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய ரவீந்தர் இரும்பு மற்றும் சிமெண்ட் வியாபாரம் செய்தார். அதன் மூலம் அவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆனதாகவும் கேரளாவில் உள்ள முன்னணி கட்டிட நிறுவனங்களில் ஒன்று இவருடையது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மலையாள குறும்பட இயக்குனர்களை ஊக்கப்படுத்துவதற்காக கொச்சி மெட்ரோ ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் என்ற அமைப்பை தொடங்கி வளரும் இயக்குனர்களுக்கு தனது தயாரிப்பில் படம் இயக்க வாய்ப்பு வழங்கி வருகிறார்.

நடிகர் ரவீந்தர், சுமா என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகன் இடுக்கி கோல்டு என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். இருப்பினும் அவர் தற்போது தந்தையின் தொழிலுக்கு உதவியாக உள்ளார்.

ஒரு தலை ராகம் சங்கர் 200 படங்களில் நடித்துள்ளாரா..? இப்போது இங்கிலாந்தில் செட்டில்..!

கடந்த 1996-ம் ஆண்டு எக்கனாமிக் டைம்ஸ் என்ற பத்திரிகை சிறந்த தொழில் நிறுவனங்கள் பட்டியலில் ரவீந்தரின் நிறுவனத்தையும் தேர்வு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டாட்டா ஸ்டீல், பிர்லா சிமெண்ட் உள்பட பல நிறுவனங்களிடமிருந்து இவர் மெடல்களும் வாங்கியுள்ளார்.