ஒரு தலை ராகம் சங்கர் 200 படங்களில் நடித்துள்ளாரா..? இப்போது இங்கிலாந்தில் செட்டில்..!

தமிழ் திரை உலகில் ஒரு தலை ராகம் திரைப்படம் பலருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்.  டி.ராஜேந்தர் இந்த படத்தில் தான் அறிமுகமானார். அதேபோல் ராபர்ட், ராஜசேகரன் என்ற ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்திற்கு பிறகு தான் பிரபலமானார்கள்.

இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் நடிகர் சங்கர். அவரை பல ஆண்டுகள் ஒரு தலை ராகம் சங்கர் என்றே அழைத்து வந்தனர். முதல் படம் பெற்ற வெற்றி காரணமாக பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிகர் சங்கர் நடித்தார்.

தமிழில் சுஜாதா, மௌன யுத்தம், கோயில் புறா, ராகம் தேடும் பல்லவி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் மலையாளத்தில் இவர் ஏராளமான படங்களில் நடித்தார்.  அவரது படங்கள் கேரளாவில் வசூலை வாரிக்குவித்தது . ஒரு தலை ராகம் என்ற வெற்றி படத்தை அவர் தமிழில் கொடுத்திருந்தாலும் தமிழில் அதன் பிறகு பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் படங்கள் இல்லை.  ராகம் தேடும் பல்லவி என்ற திரைப்படம்  ஓரளவு வெற்றி பெற்ற படமாக இருந்தது.

ஒரே வானம் ஒரே பூமி.. அமெரிக்காவை சுற்றி வந்த முதல் தமிழ் படம்…!!

மலையாளத்தில் அவர் வசூலை ஆளும் நாயகனாக இருந்தார். அதனால்தான் மலையாளத்தில் நூற்றுக்கணக்கான படங்கள் நடித்தார். 200 படங்களுக்கு மேல் நடிகர் சங்கர் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மணல் நகரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் சங்கர் கடந்த 1992 ஆம் ஆண்டு ராதிகா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் இந்த திருமணம் ஒரு சில ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை என்பதால் விவாகரத்து பெற்றனர். இதனை அடுத்து இரண்டாவது அவர் ரூபா ரேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் ஒரு சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இந்த தம்பதிக்கு கோகுல் என்ற மகன் இருக்கிறார்.

வில்லனாக அறிமுகமாகி மாஸ் ஹீரோவாக மாறிய முன்னணி ஹீரோக்களின் லிஸ்ட் இதோ!

2013 ஆம் ஆண்டு சித்ரா லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  அவர் ஒரு டான்ஸ் டீச்சர் . இந்த தம்பதிகள் இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டனர்.

தமிழ் திரையலகில் ஒரு தலை ராகம் என்ற மறக்க முடியாத படத்தை கொடுத்த சங்கர் மலையாள திரை உலகில் பல சாதனைகள் செய்த நிலையில் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டதால் அவ்வப்போது மலையாளத்தில் மட்டும் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

விஜய், அஜித்தை வைத்தே விளையாடிய விஷால்.. மார்க் ஆண்டனி வசூல் மழைக்கு மாஸ் ஐடியாதான்!..

கடந்த ஆண்டு வெளியான ஒரு மலையாள படத்தில் கூட அவர் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.  திரைப்படங்களில் மட்டுமின்றி மலையாள தொலைக்காட்சி சீரியல்களில்  நடிகர் சங்கர் நடித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews