கமல் பெயர் கமல், ரஜினி பெயர் ரஜினி, நாகேஷ் பெயர் நாகேஷ்.. சொந்த பெயரில் நடித்த படங்கள்..!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகில் வெகு சிலருக்கு மட்டுமே தாங்கள் சொந்த பெயர் உடைய கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் கமல், ரஜினி, நாகேஷ் தங்கள் சொந்தப் பெயரிலேயே நடித்தனர். கமல்ஹாசன் ரஜினிகாந்த் இணைந்து நடித்த ஆடுபுலி ஆட்டம் என்ற திரைப்படத்தில் ரஜினி பெயர் ரஜினி, கே நடராஜ் பெயர் நடராஜன் இருந்திருக்கும்.

ஆனால் கமல்ஹாசனுக்கு மட்டும் மதன் என இயக்குனர் பெயர் வைத்திருப்பார். இந்த படம் வெளியான போது ரஜினியின் பெயர் ரஜினி என்று கூறும் போதெல்லாம் ரஜினி ரசிகர்கள் தியேட்டரில் கைதட்டுவார்கள். இதனால் கமல் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைவார்கள்.

கமல், ரஜினியின் அபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நடிகர்…! அறிவுரையைக் கேட்டு சூப்பர்ஸ்டார் ஏற்ற சபதம் இதுதான்..!

ஆனால் கமல் ரசிகர்களின் வருத்தத்தை தீர்க்கும் வகையில் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற திரைப்படத்தில் அவருக்கு கமல் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கும். பாலசந்தர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிவக்குமார், கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா ஆகியோர் நடித்திருப்பார்கள்.

இந்த படத்தில் கமலின் பெயர் கமல் என்பது மட்டுமின்றி அடிக்கடி அவர் தட் இஸ் கமல் என்று ஸ்டைலாக சொல்லும்போது எல்லாம் தியேட்டரில் கைதட்டல் விண்ணை பிளக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பாலச்சந்தர் இந்த படத்தில் மட்டுமின்றி பூவா தலையா என்ற படத்திலும் நடிகர்களின் பெயரையே கேரக்டரின் பெயராக வைத்திருப்பார்.

கே பாலசந்தர் கண்டுபிடித்த நாயகி.. 50 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் சித்தாரா..!

இந்த படத்தில் ஜெமினி கணேசன் பெயர் கணேஷ் என்றும், ஜெய்சங்கர் பெயர் சங்கர் என்றும், நாகேஷின் பெயரை நாகேஷ் என்றும் வைத்திருப்பார். பாலச்சந்தர் மட்டுமே இது போன்ற வித்தியாசமான சில முயற்சிகளை எடுப்பார்.

அதேபோல் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் உருவான நிறம் மாறாத பூக்கள் என்ற படத்திலும் நடிகர்களின் பெயரே கேரக்டர்கள் பெயராக இருக்கும். இதில் சுதாகர், ராதிகா, விஜயன், ரதி என நான்கு முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த நிலையில் அனைவரது கேரக்டர் பெயரும் அவர்களது சொந்த பெயர் தான்.

13 வயதில் அறிமுகம்.. கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்த ஜெயபாரதியின் திரை பயணம்..!

அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடிகர்களின் பெயர்களையே கேரக்டர் பெயர்களாக வைத்தாலும் பின்னர் வந்த இளைய தலைமுறைகள் யாரும் இந்த பாணியை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.