அக்.6ல் வரிசைக்கட்டி நிற்கும் புதுப்படங்கள்… உங்கள் சாய்ஸ் எது?

By Nithila

Published:

வரும் வெள்ளிக்கிழமை பத்து படங்கள் திரைக்கு வர உள்ளன. அதில் லவ், ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் சிறுவர்களுக்கான படம் என கலந்து கட்டி வர இருக்கிறது.

இறுகப்பற்று

கணவன் – மனைவி இருவருக்கும் வாழ்க்கை இனிமையானதாக அமைய லைஃப் பாட்னருடன் புரிதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக படக்குழுவினர் ஒரு வீடியோவினை யூடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ சமீபத்தில் வைரலாகி இருந்தது. யுவராஜ் தயாளன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் வடிவேலு நடித்த எலி படத்தை இயக்கியவர். இறுகப்பற்று இப்படத்தில் விக்ரம் பிரபு – ஷரத்தா ஸ்ரீநாத், விதார்த் – அபர்னதி , ஸ்ரீ – சானியா ஐயப்பன் என மூன்று விதமான ஜோடிகள் ஆண், பெண் உறவில் இருக்கும் சிக்கல்களை வெளிச்சமிட்டு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லரும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ரத்தம்

சி.எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நந்திதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் வழக்கமாக சமூக அவலங்களை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு கொடுக்கும். அரசியல் கலந்த ஆக்‌ஷன் பிளாக் ரசிகர்கள் இப்படம் நல்ல சாய்ஸ்!

தி ரோட்

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட தி ரோட் , ஒரு குறிப்பிட்ட ஹைவேயில் தொடர்ந்து நடைபெறும் விபத்துக்களை கதைக்களமாக கொண்டுள்ளது. டிரெயிலர் மூலம் கதையினை ஆரம்பம் மற்றும் முடிவினை கணிக்க முடிகிறது. இருப்பினும் உண்மைச் சம்பவம் என்பதால், திருப்புமுனைகள் நிறைந்து விறுவிறுப்பாக கதை  நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிஷா, பிரதாப் சந்தோஷ், மியா ஜார்ஜ், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் வேல ராமமூர்த்தி நடித்துள்ளனர்.

மார்கழி திங்கள்

நான் மகான் அல்ல புகழ் இயக்குனர் சுசீந்திரன் தயாரித்து,  நடித்திருக்கும் இந்தப் படத்தினை இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே பாரதி இயக்கியுள்ளார். பள்ளிப்பருவ காதலையும் அதில் ஜாதி தலையீட்டினையும் தெளிவாக காட்டும் படமாக அமையும். இப்படத்திற்கு இசைஞானி இசையமைத்துள்ளார்.

800

தமிழ்நாட்டின் மருமகன் என செல்லமாக அழைக்கப்படுபவர் இலங்கை  கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தவர்.  அப்புகழுக்கு உரிய முத்தையா முரளிதரனின் வாழ்க்கை மற்றும் அவர் கிரிக்கெட்டில் நுழைந்து எப்படி அசாத்தியமான சாதனைகளை புரிந்தார் என விளக்கும் படம் 800. ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் நடித்த மாத்தூர் மிட்டல் என்பவர் முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார். மேலும் மகிமா நம்பியார், நாசர், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி எக்ஸார்ஸிஸ்ட்

 செப்டம்பர் இறுதியில் தி நன் வெளியாகி பீதியை கிளப்பியது. அதே வரிசையில் தற்போது தி எக்ஸார்ஸிஸ்ட் வெளியாக உள்ளது. பேயின் பிடியில் சிக்கி தவிக்கும் இரு சிறுமிகளை மீட்க வரும் எக்ஸார்ஸிஸ்ட். பேய் படங்களினை விரும்புவர்களுக்கு இது மற்றுமொரு டிரிட்.

ஷாட் பூட் த்ரீ

செல்ல நாயினை தொலைக்கும் சிறுவன் அதைத் தேடி செல்கிறான். அச்சிறுவன் தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் நாயினை தேடி செல்லும் போது ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் படம் ஷாட் பூட் த்ரீ. வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...