13 வயதில் அறிமுகம்.. கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்த ஜெயபாரதியின் திரை பயணம்..!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயபாரதி கமலஹாசனுக்கு அம்மா உள்பட பல முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அவரது நடிப்பு ரசிகர்கள் மனதில் நிற்கும் வகையில் உருக்கமாக இருக்கும்.

நடிகை ஜெயபாரதி கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும்  அவர் சிறுவயதில் ஈரோடு மற்றும் கோவையில் தான் வளர்ந்தார். அவர் சிறுவயதில் பள்ளி படிப்பின் போதே நடனம் நாட்டியம் ஆகியவற்றை முறைப்படி கற்று, அரங்கேற்றமும் செய்தார்.

இந்த நிலையில் தான் அவர் 13 வயதாக இருக்கும்போது அவருக்கு மலையாளத் திரை உலகில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து அடுத்த படமே அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஒரே நாளில் 2 படங்களில் அறிமுகமான நடிகை.. அறிமுகம் செய்த இயக்குனருடன் திருமணம்.. பல்லவியின் திரைப்பயணம்..!

1966 ஆம் ஆண்டு கேஎஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான சின்னஞ்சிறு உலகம் என்ற படத்தில் அவர் நடிகையாக அறிமுகமானார். ஜெமினி கணேசன், கேஆர் விஜயா, நாகேஷ் நடித்த இந்த படத்தில் ஜெயபாரதியின் கேரக்டர் மக்கள் மனதில் பதியும் வகையில் இருந்ததால் அவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

குறிப்பாக எம்ஜிஆர் உடன் பறக்கும் பாவை என்ற படத்திலும் தலைவன் என்ற படத்திலும் நடித்தார். அதேபோல் சிவாஜியுடன் பேசும் தெய்வம், மோகன புன்னகை உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் புதிய வாழ்க்கை, நான் அவன் இல்லை உள்பட ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு திருப்புமுனை கொடுத்த படம் என்றால் அது ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த ’அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்ற படம்.

இந்த படத்தில் ஜெயபாரதி ராணி ரோஷினி என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்திருப்பார். இதனை அடுத்து அவர் பசி, சரணம் ஐயப்பா போன்ற படங்களில் நடித்த நிலையில் பாசில் இயக்கத்தில் உருவான வருஷம் 16 என்ற சூப்பர் ஹிட் படத்தில் அவர் கார்த்திக் அம்மாவாக நடித்திருந்தார்.

அதேபோன்று கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனின் அம்மாவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் சோகமாக உருக்கமாக நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார்.

ஒரு பார்வையில் ஹீரோக்களை மிரட்டும் நடிகையாக வாழ்ந்த நடிகை பானுமதி!

தங்கத்தின் தங்கம், சிறையில் பூத்த சின்ன மலர், மதுரை வீரன் எங்க சாமி, மறுபக்கம், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு விக்ரம், லைலா நடித்த தில் என்ற திரைப்படம் தான் இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டும் இன்றி ஏராளமான மலையாள படங்களில் அவர் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் அவர் மலையாளத்தில் நடித்துள்ளார். அவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடித்த லட்சுமி என்ற திரைப்படத்தில் வெங்கடேஷ் தாயாராக இவர் நடித்திருந்தார்.

இவர் நடித்த ஒரே தெலுங்கு திரைப்படம் இதுதான். நடிகை ஜெயபாரதி சத்தார் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் சத்தார் மயில், சௌந்தர்யமே வருக வருக உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர். இந்த தம்பதிக்கு கிரிஷ் என்ற மகன் உள்ளார்.

இவர் தொழிலதிபராக இருந்தாலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாகமாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். நடிகை ஜெயபாரதி கணவரின் மறைவிற்கு பின்னர் நாட்டிய பள்ளி நடத்தி அதில் குழந்தைகளுக்கு நாட்டியம் கற்றுத்தந்து கொண்டிருக்கிறார்.

தொழிலதிபருடன் திருமணம்.. அரசியலில் தோல்வி.. இந்தியன் பட நடிகை ஊர்மிளாவின் அறியாத தகவல்கள்..!!

அவரது நாட்டிய பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். 13 வயதில் நடிக்க வந்து, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயபாரதியின் நடிப்பு திரை உலகம் உள்ளவரை பேசப்பட்டு கொண்டிருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews