கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை நிஷா நூர். இவர் பின்னாளில் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு காய்ந்த சருகாக அனாதையாக இறந்த சோகம் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நடிகை நிஷா நூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் பிறந்தவர். அவரது அம்மா அப்பா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் திடீரென இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இதனையடுத்து நிஷா நூர் அம்மா தனது மகளுடன் சென்னைக்கு குடியேறினார். சென்னை கோடம்பாக்கத்தில் குடியேறிய அவர் சினிமாவில் சின்ன சின்ன பணிகள் செய்து வந்தார். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து அவர் தனது மகளை செல்லமாக வளர்த்தார்.
எம்ஜிஆர் நடித்த சில காட்சிகள்… முழு படத்தை தயார் செய்த ஜேப்பியார்..!
மகளை திரையுலகில் ஒரு பெரிய ஹீரோயின் ஆக்க வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது. இதற்காகவே நிஷா நூர்க்கு சிறுவயதிலேயே நடனம் நாட்டியம் கற்றுக் கொடுத்தார். அவரது முயற்சியும் வீண் போகவில்லை. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான மங்கள நாயகி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நிஷா நூர் நடித்தார்.
அதன் பிறகு சுருளி ராஜன் நடித்த முயலுக்கு மூன்று கால், சுமன் ராதிகா நடித்த இளமைக் கோலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த டிக் டிக் டிக் என்ற படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் கிடைத்த புகழ் காரணமாக அவருக்கு மேலும் சில படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இனிமை இதோ இதோ, அவள் சுமங்கலி தான் போன்ற படங்களில் நடித்தார். இதனை அடுத்து ரஜினியுடன் அவருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான கல்யாண அகதிகள் என்ற திரைப்படத்தில் சரிதாவின் தோழியாக நடித்திருப்பார். அவரது நடிப்பை பாலச்சந்தரே பாராட்டியதாகவும் தகவல்கள் உண்டு.
தமிழில் மட்டும் இன்றி மலையாளத்திலும் நிஷா நூர் சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் திடீரென நிஷா நூர் தாயார் இறந்துவிட்டார். தாயார் மரணத்திற்கு பின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அவர் திரை உலகில் இருந்து பாதை மாறியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென நிஷா நூர் குறித்த செய்திகள் எதுவும் இல்லாமல் இருந்தது. திரை உலகினர் மற்றும் ரசிகர்களும் அவரை மறந்து விட்டனர்.
பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை சில்க் ஸ்மிதா… அவர் அப்ப சொன்ன காரணம் தான் ஹைலைட்டே…
இந்த நிலையில் தான் அவர் நாகூர் தர்கா அருகே உடல் மெலிந்து அனாதையாக ஒருநாள் காணப்பட்டார். அவரது உடலில் புழுக்கள் மற்றும் எறும்புகள் ஒட்டிக்கொண்டு எலும்புக்கூடு போல் பரிதாபமாக இருந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இஸ்லாமிய சகோதரர்கள் அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சில ஆண்டுகள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடத்த 2007 ஆம் ஆண்டு காலமானார். தாயார் இருக்கும் வரை திரையுலகில் நிஷா நூர் நல்ல கேரக்டரில் நடித்து கொண்டிருந்த நிலையில் தாயாரின் மறைவுக்கு பிறகு அவர் தவறான வழிகாட்டுதல் காரணமாக பாதை மாறினார். இதனால் அவருக்கு எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி பரவியது.
நடிகர் அஜித்துக்கு மட்டும் இத்தனை பட்ட பெயரா.. இவளோ நாள் இது தெரியாம போச்சே!
அவர் தனது சிகிச்சைக்காகவே தனது சம்பாத்தியம் முழுவதையும் இழந்த பின்னர் ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கு பணமில்லாமல் அவர் அனாதையாக தள்ளப்பட்டார். பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மனதை கொள்ளை கொண்ட நிஷா நூர் முடிவு என்பது யாருக்கும் நேர கூடாத ஒரு சோகமான முடிவாகும்.