நடிகர் அஜித்துக்கு மட்டும் இத்தனை பட்ட பெயரா.. இவளோ நாள் இது தெரியாம போச்சே!

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியானது. ஹெச்.வினோத் இயக்கத்தில் வங்கி கொள்ளையை மையமாக வைத்து திரில்லர் படமாக துணிவு வெளிவந்தது. இந்த படத்தில் அஜித்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியா நடித்திருந்தார்.

மேலும் 3-வது முறையாக போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவானது. அதே போல் தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் படத்தை வெளியிட்டது. அஜித்தின் துணிவு படம் வெளியான முதல் நாளே 24.6 கோடி வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு திரைப்படமும் அந்த நேரத்தில் வெளியானது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆனது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் துணிவு படத்தை தொடர்ந்தும் அடுத்ததாக அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது என அஜித்தின் பிறந்தால் அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை.

மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா மற்றும் தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் குறித்தும் அவரது பட்ட பெயர்கள் குறித்தும் சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. நடிகர் அஜித் பொதுவாக எந்த புகழ்ச்சியையும் விரும்பாதவர் என்பது அனைத்து ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயம்.

தற்பொழுது அஜித்தின் தொடக்க காலத்தில் இருந்து அவர் பெயருக்கு கிடைத்த பட்டங்கள் என்னென்ன என்பது பார்க்கலாம் வாங்க…

தமிழ் சினிமாவில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த அமராவதி திரைப்படத்தில் மூலமாக தான் அஜித் குமார் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் போது அவருக்கு எந்த பட்ட பெயரும் கிடையாது.

அதை தொடர்ந்து 1995 இல் வெளிவந்த திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தில் அஜித் குமாருடன் இணைந்து விஜய் நடித்திருப்பார், ஜானகி செளந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார், மேலும் இந்த படத்திலும் விஜய்க்கு இளைய தளபதி விஜய் என்றும் அஜித்திற்கு எந்த பட்ட பெயரும் இல்லாமல் அஜித் என்று தான் அழைக்கப்பட்டார்.

இந்த படத்திற்கு பின் தனக்கும் ஒரு பட்டம் வேண்டும் என நினைத்திருந்த அஜித்திற்கு அதே ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆசை. இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. ஆசை படம் தாறுமாறாக ஹிட் அடித்ததால் இந்த படத்திற்கு பிறகு அஜித் நடித்த அடுத்த படத்தில் இருந்து அவர் ஆசை நாயகன் அஜித்குமார் என அழைக்கப்பட்டார்.

அதன் பின் அடுத்தடுத்து வந்த ஒரு சில படங்களில் ஆசை நாயகன் அஜித்குமார் என பயன்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு காதல் கோட்டை திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் அஜித்திற்கு வெற்றி படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் அஜித் குமார், தேவயானி, ஹீரா ராஜகோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பின் ஆசை நாயகன் என்னும் பட்டம் நீக்கப்பட்டது.

அதன் பின் அஜித்தின் 25வது படமான அமர்க்களம் படத்தில் லக்கி ஸ்டார் என்னும் பட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்த திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையை திருமண வாழ்க்கையுடன் இணைத்தது. இந்த படத்திற்கு பின் நடிகை ஷாலினியை அஜித் காதலித்து திருமண செய்து கொண்டார்.

அதை தொடர்ந்து 2000 ஆண்டு வெளியான உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் தான் அல்ட்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்னும் பட்டம் வந்தது, இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பின் 2007 ஆம் ஆண்டு வரை வெளியான பில்லா படம் வரை பல படங்களில் அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் என பயன்படுத்தப்பட்டது.

200 நாட்களுக்கு மேல் திரையில் கொடிகட்டி பறந்த ரஜினியின் 8 மாஸான திரைப்படங்கள் ஒரு பார்வை!

ஆனாலும் அதற்கு இடையில் 2003 ஆம் ஆண்டு வெளியான என்னை தாலாட்ட வருவாளா படத்தில் ஆக்சன் ஹீரோ அஜித் என பயன்படுத்தப்பட்டது. மேலும், 2001ல் வெளியான தீனா என்ற படத்தால்  உருவான தல என்னும் பட்டம் பிரபலமடைந்து 2011 ஆண்டு வெளியான மங்காத்தா படத்தில் தான் முதல் முறையாக தல அஜித் என பட்டம் நிலையானது.

இந்நிலையில் எந்த பட்ட பெயர்களுக்கு ஆசை படாத அஜித் தன்னை தனது பெயர் குறித்தே அழைக்க வேண்டும் என்று கூறினார். அதன் பின் பில்லா 2 படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான துணிவு படம் வரை எந்த பட்ட பெயரும் வைக்கவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...