உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதலில் சல்மான் கானை காதலித்து அவரை கிட்டத்தட்ட திருமணம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் ஐஸ்வர்யாராயின் மனதை பலர் மாற்றினார். மதம் உள்பட பல்வேறு விஷயங்களை அவரிடம் கூறி அவருடைய மனதை மாற்றி காதலை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக கூறப்பட்டது.
சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் காதலுக்கு நிஜ வில்லன்களாக இருந்தவர்கள் பல பிரபலங்கள் என்றும் கூறப்படுவது உண்டு. அதனை அடுத்து தான் அவர் சல்மான் கானை பிரிந்து 4000 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரரான அமிதாப் குடும்பத்தின் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் கடந்த 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். அந்த காலத்தில் ஒரு இந்திய பெண் உலக அழகி பட்டத்தை வெல்வது என்பது சாதாரணமானது அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் தான் உலக அழகி பட்டம் இருந்தது. அவர்கள் நினைத்தவர்கள் தான் உலக அழகி பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
கிரிக்கெட் விளையாட போன இடத்தில் காதல்.. வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல ஹீரோயின்..!
ஆனால் அதையும் மீறி தன்னுடைய அழகு அறிவு காரணமாக உலக அழகி போட்டியில் ஐஸ்வர்யா ராய் வென்ற போது உலகமே ஆச்சரியமாக பார்த்தது. உலக அழகி பட்டத்திற்கு பின் அவருக்கு சில விளம்பரங்களில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் விளம்பர படத்தை இயக்கியவர் தமிழ் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன்.
தனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் என்பதால் ராஜிவ் மேனன் மீது ஐஸ்வர்யா ராய்க்கு மிகப்பெரிய மதிப்பு மரியாதை இருந்தது. அவர் எப்போது கால்ஷிட் கேட்டாலும் உடனே கொடுப்பார். ராஜிவ் மேனன் மீது இருந்த மரியாதை காரணமாக தான் அவரது இயக்கத்தில் உருவான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்புக்கொண்டார்.
அதேபோல் திரைப்படத்தில் முதன் முதலில் ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்தது மணிரத்னம் தான். தன்னுடைய இருவர் படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன் பிறகு தான் அவர் பாலிவுட் சென்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ராஜிவ் மேனன் மீது எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறதோ அதேபோல் மணிரத்னம் மீதும் ஐஸ்வர்யா ராய்க்கு மரியாதை இருந்தது. மணிரத்னம் எப்போது கால்ஷீட் கேட்டாலும் கொடுப்பார்.
இந்த நிலையில் சல்மான் கானுடன் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஐஸ்வர்யா ராய்க்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகினார்கள். பல இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து போனார்கள் என்பதால் பாலிவுட்டில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறப்பட்டது
ஆனால் ஐஸ்வர்யா ராயின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருடைய மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராய் தனது உறவினர்களுக்காக தனது காதலை தியாகம் செய்ய முன்வந்தார். சல்மான் கானுடன் அவர் தனது காதலை முடித்துக் கொண்டார். இதனால் சல்மான் கான் மிகப்பெரிய அளவில் வருத்தமடைந்ததாகவும் அதனால் தான் அவர் இன்று வரை திருமணமே செய்யாமல் இருப்பதாகவும் கூறப்படுவதுண்டு.
சல்மான் கானுடன் காதல் முறிவுக்கு பின்னால் ஐஸ்வர்யா ராய் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் என்பவரை காதலித்தார். இவர்கள் இருவரின் காதல் திருமணத்தை நெருங்கியபோது இந்த காதலும் திடீரென முடிந்து போனது. இதனை அடுத்து தான் தூம் 2 என்ற படத்தில் அபிஷேக் பச்சனுடன் நடிக்கும் போது அவருக்கு காதல் உருவானது.
முதல் சந்திப்பில் காதலில் விழுந்த ரஜினி! லதா – ரஜினிகாந்த் காதல் கதை குறித்து பல தகவல்கள்!
இந்த காதல் மணிரத்னம் இயக்கிய குரு படத்தின்போது மேலும் உறுதியானது. முதலில் அமிதாப்பச்சன் இந்த காதலை ஏற்கவில்லை என்றாலும் மகனின் ஆசைக்காக ஒப்புக்கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் ஐஸ்வர்யா ராய் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார்.