முதல் சந்திப்பில் காதலில் விழுந்த ரஜினி! லதா – ரஜினிகாந்த் காதல் கதை குறித்து பல தகவல்கள்!

திரைப்பட தயாரிப்பாளர், பாடகி, கல்வியாளர், தொழிலதிபர், காஸ்ட்யூம் டிசைனர், சூப்பர் ஸ்டாரின் மனைவி என லதா – ரஜினிகாந்த் குறித்து யாருக்கும் தெரியாத பல தகவல்களை பார்க்கலாம் வாங்க..

1958 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி ரங்காச்சாரி என்பவரின் மகளாக சென்னையில் பிறந்தார் லதா. ஐயங்கார் சமுதாயத்தை சேர்ந்த ரங்காச்சாரி தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் பணிபுரிந்து வந்தார். பிரபல நடிகை வைஜெயந்திமாலைவின் நெருங்கிய உறவினர் தான் ரங்காச்சாரியார். அவர் தனது மூத்த மகளை ஒய்.ஜி மகேந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்த வகையில் லதாவின் குடும்பம் திரைப்படத்துறையில் நேரடியாக ஈடுபாடு கொண்டது.

மேலும் லதாவின் சகோதரர் ரவி ராகவேந்திராவும் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவரது மகன் தான் பிரபல இசையமைப்பாளர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிப்பில் முதல் மாணவியாக தங்கப்பதக்கத்துடன் பள்ளி படிப்பை முடித்த லதா பிரபல பெண்கள் கல்லூரியான எத்திராஜ் கல்லூரியில் பி.எ ஆங்கில இலக்கியம் பயின்றார். பலரை போலவே லதாவிற்கும் கல்லூரியே காதல் வாழ்க்கையை அமைத்து கொடுத்தது என்றாலும், லதாவின் காதல் கதை சற்று வித்தியாசமானது என்று கூறலாம்.

கல்லூரி சிறப்பு நாளிதலுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யை பேட்டி எடுத்து அந்த பேட்டியை கல்லூரி மலரில் இடம் பெற செய்ய வேண்டும் என லதா முடிவு செய்தார்.

அதை அடுத்து, ரஜினியை சந்திக்க தனது அக்கா கணவரான ஒய்.ஜி மகேந்திரனின் உதவியுடன் அப்பாயின்மென்ட் கிடைத்தது . 20 நிமிடம் அப்பாயின்மென்ட் பெற்ற லதா இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ரஜினியிடம் பேட்டி எடுத்த பின் விடை பெற நினைத்தபோது தான் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை சம்பவம் நடைபெற்றது.

ரஜினியிடம் நன்றி கூறி விடை பெற நினைத்த லதாவிடம் உங்களை திருமணம் செய்து கொள்ள நினைப்பதாக ரஜினி கூறியுள்ளார். சற்றே அதிர்ந்த லதா பெற்றோரிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டு விடை பெற்றார். ரஜினி தனது ஆசையை சுற்றி வளைக்காமல் சட்டென்று கூறிய விதமும்,உன்னை காதலிக்கிறேன் என கூறாமல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறிய பாங்கும் லதாவை ரொம்பவே கவர்ந்தது.

ஆனால், திருமணம் பேச்சு வார்த்தையில் ஒரு சிக்கல் இருந்தது. ரஜினி அப்போது தூங்க கூட போதுமான நேரம் இல்லாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலம் அது. 1978 மற்றும் 1979 ஆகிய இரண்டு வருடங்களில் மட்டும் 36 படங்கள் நடித்தார். அப்போது ரஜினிக்கு நர்வஸ் பிரேக் டவுன் எனப்படும் நரம்பியல் பிரச்சனை ஏற்பட்டது அதிகமான குடியால் தான் அந்த பிரச்சினை ஏற்பட்டது என அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

நடிகர் அஜித்துக்கு மட்டும் இத்தனை பட்ட பெயரா.. இவளோ நாள் இது தெரியாம போச்சே!

ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாத லதாவின் குடும்பத்தினர் சம்மதத்துடன் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி திருப்பதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு எளிமையான முறையில் லதா ரஜினி திருமணம் நடைபெற்றது. இன்றளவும் இவர்கள் இருவரும் பல தடைகளை தாண்டி ஒற்றுமையுடன் வாழ்த்து வருகின்றனர்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...