கடன் வழங்கி உதவிய கமல்… படம் இயக்கி கொடுத்த பாலு மகேந்திரா… அதுதான் சூப்பர்ஹிட் சதிலீலாவதி..!!

By Bala Siva

Published:

இயக்குனர் பாலு மகேந்திரா, கமல்ஹாசனிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக அவருக்கு ஒரு திரைப்படம் இயக்கி கொடுத்தார் என்றால் அந்த திரைப்படம் தான் சதிலீலாவதி. கமலஹாசன், கோவை சரளா நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவானது அந்த திரைப்படம்.

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பல மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்தது சதிலீலாவதி. முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு கிரேசி மோகன் வசனம் எழுதி இருப்பார். என்பதும்

இந்த படத்தில் ரமேஷ் அரவிந்த் – கல்பனா ஒரு ஜோடியாகவும் கமல்ஹாசன் – கோவை சரளா ஒரு ஜோடியாகவும் நடித்திருப்பார்கள். இன்னொரு முக்கிய கேரக்டரில் ஹீரா நடித்திருப்பார். மனைவி குண்டாக இருக்கிறாள் என்பதால் விருப்பம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ரமேஷ் அரவிந்த், ஹீராவை சந்திக்கும் போது அவரிடம் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

இறந்த பின் பேரறிஞர் அண்ணாவை நடிக்க வைத்த கே.பாலசந்தர்.. விவாகரத்தான கணவன் – மனைவி கதை..!

sathi leelavathi2

இருவரும் கிட்டத்தட்ட இணைந்து வாழும் நிலைமை ஏற்படும் போதுதான் கமல்ஹாசனுக்கு இந்த உண்மை தெரியவரும். ரமேஷ் அரவிந்தை திருத்தி மனைவியுடன் வாழ வைப்பது மட்டுமின்றி ஹீராவின் உண்மையான காதலருடன் சேர்த்து வைப்பார். இந்த கதை முழுக்க முழுக்க காமெடி அம்சமாக, ஒரு இடத்தில் கூட சீரியஸ் காட்சி இல்லாமல் இருக்கும்.

கமல்ஹாசனுக்கு இணையாக கோவை சரளா நடித்திருப்பார். கமல்ஹாசன் ஜோடியாக கோவை சரளாவா என்று அதிர்ச்சி அடைந்தவர்கள் படம் பார்த்த பின்னர் ஆச்சரியம் அடைந்தார்கள். இந்த படத்தில் எனக்கு நடிப்பிற்கு பெயர் கிடைத்துள்ளது என்றால் அதில் 50% கோவை சரளாவுக்கே சேரும் என்று கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

கோவை சரளாதான் ஹீரோயின் என்பதை பாலு மகேந்திரா முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஆனால் படத்தில் கோவை சரளாவின் உண்மையான திறமையை கண்டுகொண்டார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கி உள்ளாரா? அதில் ஒன்று கமல் படம்..!

sathi leelavathi1

ஹிட்டான இந்த படம் தயாரிப்புக்கு பின் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. சந்தர்ப்பவசம் காரணமாக பாலு மகேந்திரா கடனில் தத்தளித்து கொண்டிருந்தார். அவர் இதுவரை யாரிடமும் பணம் கேட்டதில்லை என்பதால் யாரிடம் பணம் கேட்பது என்ற சோகத்தில் இருந்தார். அப்போது பாலு மகேந்திராவுக்கு நெருக்கமான ஒருவர் “உங்களுக்கு தான் கமல்ஹாசன் மிகவும் நெருங்கிய நண்பராக இருக்கின்றாரே, அவரிடம் நீங்கள் கேட்கலாமே” என்று கூறினார். வேறு வழியே இல்லாமல் கமல்ஹாசன் வீட்டுக்கு பாலு மகேந்திரா சென்றார்.

அப்போது கமல்ஹாசன் வெளியே கிளம்பி கொண்டிருந்த நிலையில் பாலு மகேந்திராவை பார்த்தவுடன் உள்ளே அழைத்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார். உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் படப்பிடிப்புக்கு நேரமானதால் கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாரானார் பாலுமகேந்திரா அதுவரை கமல்ஹாசனிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் தனக்கு பணம் வேண்டும் என்பதை அவர் சொல்லவே இல்லை.

தளபதி 68 படத்தின் ஹீரோயின் இவங்க தான்.. வெங்கட் பிரபு கொடுத்த தெறிக்க விடும் அப்டேட்!

அப்போது கமல் திடீரென உள்ளே சென்று கட்டு கட்டாக பணத்தை எடுத்து வந்து பாலுமகேந்திரா கையில் கொடுத்தார். நீங்கள் ஏன் வந்திருப்பீர்கள் என்பதை உங்கள் கண்களை வைத்தே நான் புரிந்து கொண்டேன். இந்த பணத்தை நான் உங்களுக்கு இனாமாக தரவில்லை, என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படத்தை இயக்கி தரவேண்டும், அதற்கு அட்வான்ஸ் என்று கொடுத்தார். இந்த கடனை அடைப்பதற்காக பாலு மகேந்திரா இயக்கிய திரைப்படம் தான் சதிலீலாவதி.