தளபதி 68 படத்தின் ஹீரோயின் இவங்க தான்.. வெங்கட் பிரபு கொடுத்த தெறிக்க விடும் அப்டேட்!

தளபதி விஜய் லோகேஷ் இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் படத்தில் விஜய்க்கு கோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதம் 19 ஆம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ஆடியோ லான்ச் விழாவிற்காக விஜய் ரசிகர்கள் ஆவலும் காத்து வருகின்றனர். லியோ படத்தில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு முதலில் வெளிநாடுகளில் நடத்த பிளான் போட்டுள்ளது. அதன் பின் தவிர்க்க முடியாத சில காரணத்தினால் சென்னையில் நடத்த முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் குட்டி ஸ்டொரிக்காக பல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் தற்பொழுது வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அதை முடித்து தனது அடுத்த படமான வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய் 68 இந்த படத்தில் விஜய்க்கு 200 கோடி சம்பளம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் குற்றவியல் புலனாய்வாளர்கள் குழுவை வழிநடத்தும் மூத்த சிபிஐ தலைமை அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் 68 படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில் இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகிகள் குறித்த மாசான அப்டேட் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடித்த அடியே படத்தின் புரொமோஷனில் இயக்குனர் வெங்கட் பிரபு கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது நடந்த நிகழ்ச்சியில் தளபதி 68 படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் கேள்வியாக வெங்கட்பிரபுவிடம் கேட்கப்பட்டுள்ளது.

நடிகர் பாக்யராஜின் காதலுக்கு உதவிய வடிவுக்கரசி! நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

அதற்கு வெங்கட் பிரபு முதலில் லியோ படம் தான், அதன் பிறகு தான் தளபதி 68 அப்டேட் வெளியாகும் என கூறியுள்ளார். அதற்கு அடுத்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளர் தளபதி படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்க உள்ளார்களா என கேட்டுள்ளனர்.

இந்த கேள்விக்கு வெங்கட் பிரபு இந்த 3 ஹீரோயினும் இல்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக புது முகமா என்ற கேள்விக்கு இல்லை என பதிலளித்துள்ளார். இந்நிலையில் தளபதி 68 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பேச்சில் தற்பொழுது டாப்பில் உள்ளது நடிகை ஜோதிகா தான். அவர் நடிக்க தான் அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...