களத்தில் இறங்கும் விஜய்யின் மகன்! பாராட்டி தள்ளிய அஜித்!

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்பொழுது விஜய் தான் 67வது படமான லியோ படத்தில் நடித்து முடித்து விட்டு அடுத்ததாக வெங்கட்பிரபு படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் கௌரவ தோற்றத்தில் மகளாக திவ்யா ஷாஷா நடித்திருப்பார்.

2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். இந்த நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது.

அதை தொடர்ந்து அவர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்றார். மேலும் அவருக்கு தந்தை விஜய் போல நடிக்க அதிகம் விருப்பம் இல்லை என்றும் தாத்தா போல படங்களை இயக்க தான் ஆசைப்படுவதாகவும் கூறப்படுகிறது .

முன்னதாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கு ஒரு முறை கதை சொல்லி இருந்தார். ஆனால் நடிப்பில் ஈடுபாடு இல்லை என்றும் இயக்குனராக விரும்புவதாகவும் சஞ்சய் கூறியது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் ஆங்கிலத்தில் பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சுபாஷ்கரனினி லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்திற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களை நிறுவனம் தனது ட்விட்டரில் பகிர்ந்து உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் இதனை உற்சாகத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.

சிவாஜியை விட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கிய எம்.ஜி.ஆர்! என்ன காரணம் தெரியுமா?

இந்த படத்திற்கான விளம்பரப் பணிகளை சுரேஷ் சந்திரா தான் மேற்கொள்கின்றார். அஜித்தின் பி ஆர் ஓ அவர்தான். விஜய் மகனின் முதல் படம் அறிவிப்பு குறித்து அஜித் பாராட்டி பேசியுள்ளார். மேலும் தனது வாழ்த்துக்களை சுரேஷ் சந்திரா மூலம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் அஜித்தின் விடாமுயற்சி படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...