ஏவிஎம் நிறுவனத்திற்காக பட ரிலீஸை தள்ளி வைத்த எம்ஜிஆர்.. ஆனால் 20 நாட்களில் ரிலீஸ் செய்ததால் சிக்கல்..!

ஏவிஎம் நிறுவனம் மற்றும் சத்யா மூவிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் எம்.ஜி.ஆரை வைத்து ஒரே நேரத்தில் திரைப்படம் தயாரிக்க, கிட்டத்தட்ட இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாகும் நிலை இருந்தது. ஆனால் ஏவிஎம் நிறுவனம்…

ஏவிஎம் நிறுவனம் மற்றும் சத்யா மூவிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் எம்.ஜி.ஆரை வைத்து ஒரே நேரத்தில் திரைப்படம் தயாரிக்க, கிட்டத்தட்ட இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாகும் நிலை இருந்தது. ஆனால் ஏவிஎம் நிறுவனம் தங்கள் படம் முதலில் வெளியாக வேண்டும் என்று எம்ஜிஆரிடம் கேட்டுக் கொண்டதால், சத்யா மூவிஸ் திரைப்படத்தை 20 நாள் தள்ளி எம்ஜிஆர் ரிலீஸ் செய்ய வைத்தார். அந்த படம் தான் ‘நான் ஆணையிட்டால்’ திரைப்படமாகும்.

எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த திரைப்படம் ‘அன்பே வா’. இந்த படத்தை 1966ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட ஏவிஎம் நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் எம்ஜிஆர் நடிப்பில் சத்யா மூவிஸ் தயாரித்த ‘நான் ஆணையிட்டால்’ என்ற திரைப்படத்தையும் பொங்கல் தினத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

எம்ஜிஆர் அறிமுகமான படத்தில் அறிமுகம்.. 1000 படங்களுக்கும் மேல் நடித்த தங்கவேலுவின் கதை..!

ஒரே நேரத்தில் இரண்டு எம்ஜிஆர் படங்கள் வந்தால் வசூல் பாதிக்கும் என்று கருதிய ஏவிஎம் நிறுவனம் எம்ஜிஆரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ‘அன்பே வா’ திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்றும், ஒன்று அல்லது இரண்டு மாதம் கழித்து ‘நான் ஆணையிட்டால்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்றும் ஏவிஎம் கேட்டுக் கொண்டார்.

anbe vaa

இதனையடுத்து சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பனிடம் கலந்தாலோசித்து ‘நான் ஆணையிட்டால்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக எம்ஜிஆர் வாக்குறுதி அளித்தார். 1966ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ‘அன்பே வா’ ரிலீசானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்த 20 நாட்களில் ‘நான் ஆணையிட்டால்’ திரைப்படத்தை எம்ஜிஆர் வெளியிட்டார். இதனால் ‘அன்பே வா’ வசூல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்று, நூறு நாட்கள் ஓடி வெற்றி படங்களாக அமைந்தன.

‘நான் ஆணையிட்டால்’ திரைப்படத்தின் கதையை பார்த்தால் கொள்ளை கூட்டத்தில் இருக்கும் எம்ஜிஆர் மனம் திருந்தி நல்லவராக வாழலாம் என்று முடிவு செய்வார். கொள்ளை தலைவனிடம் இதனை கூறுவார். அவரும் ஒரு கட்டத்தில் அதை ஏற்றுக் கொள்வார். ஆனால் அந்த கொள்ளை கூட்டத்தில் இருந்த நம்பியார் அதற்கு உடன்பட மாட்டார். அதனால் எம்.ஜி.ஆரை ஒரு கொலை வழக்கில் சிக்க வைத்து விடுவார்.

எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாத ஒரே படம்.. ஏவிஎம் – எம்ஜிஆர் இணைந்த முதல் படம்.. ‘அன்பே வா’ வெற்றி பெற்றது எப்படி?

naan aanaiyittal mgr

இந்த கொலை பழியில் இருந்து எம்ஜிஆர் மிகவும் கஷ்டப்பட்டு தப்பித்து பணக்காரர் ஒருவரின் வீட்டில் தங்குவார். அந்த வீட்டில் வேலை செய்யும் மேனேஜர் பல திருட்டுத்தனங்கள் செய்து கொண்டிருக்கும் நிலையில் எம்ஜிஆர் வரவால் அவருக்கு சிக்கலாக இருக்கும். இந்த நிலையில்தான் நம்பியார் மற்றும் மேனேஜர் ஆகிய இருவரும் சேர்ந்து எம்ஜிஆரை அந்த வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்வார்கள். அவர்களது முயற்சி பலித்ததா? இருவரது சதிகளை எம்.ஜி.ஆர் உடைத்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை.

எம்.ஜி.ஆர் ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்த நிலையில் சரோஜாதேவி இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், அசோகன், நாகேஷ் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை சாணக்யா என்பவர் இயக்கியுள்ளார்.

ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான இந்த படத்தில் ‘தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதேபோல் ‘நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்’ என்ற பாடல் இன்றும் பலரது மனதில் இருக்கும் நீங்கா நினைவுள்ள பாடலாகும். இந்த படத்திற்கு ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுதியதை அடுத்து நல்ல வசூல் செய்தது.