சிவாஜி கணேசன் எத்தனையோ படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் அவர் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் நடித்த ஒரே ஒரு திரைப்படம்தான் ‘தங்க சுரங்கம்’. சிபிஐ அதிகாரியாக இந்த படத்தில் அவர் சூப்பராக நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவாஜி கணேசன், பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா, ஓ.ஏ.கே.தேவர், எஸ்.வரலட்சுமி, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அன்பு நடமாடும் கலைக்கூடமே… சிவாஜியின் அற்புதமான நடிப்பில் உருவான அவன்தான் மனிதன்!
இந்த படத்தின் ஆரம்பத்தில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வகையில் காட்சி ஆரம்பிக்கும். அப்போது பர்மாவில் இருந்து இந்தியாவுக்கு செல்ல இந்தியர்கள் முயற்சி செய்வார்கள். அப்போது வரலட்சுமி தனது மகனுடன் கப்பலில் ஏற செல்லும்போது கப்பலில் இடம் இல்லை என்று கூறி மறுத்து விடுவார்கள்.

ஆனால் தன் மகனாவது இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென்று அவர் ஒரு பாதிரியாருடன் மகனை அனுப்பி வைப்பார். அதன்பின் நீண்ட வருடங்கள் கழித்து பாதிரியாரை வரலட்சுமி பார்க்கும்போது அவரது மகன் சிவாஜியை அவருக்கு அறிமுகம் செய்து வைப்பார்.
இந்த நிலையில்தான் செயற்கை தங்கத்தை உற்பத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிய செய்யும் வில்லனை பிடிக்கும் பணி சிவாஜி கணேசனிடம் ஒப்படைக்கப்படும். அவர் விதவிதமாக துப்பறிந்து கிட்டத்தட்ட வில்லனை நெருங்கி விடுவார். அப்போதுதான் திடீரென தனது திட்டங்கள் எல்லாம் வில்லனுக்கு தெரிய வரும். எப்படி வில்லனுக்கு தனது ரகசியங்கள் தெரிந்தது என்று யோசிக்கும்போதுதான் சிவாஜியின் அம்மாவே வில்லனிடம் கூறி இருப்பார் என்பதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைவார்.
இது குறித்து அவர் கேட்டபோது, ‘நீ தேடிக் கொண்டிருக்கும் நபர் தான் உன்னுடைய அப்பா’ என்று சிவாஜியின் அம்மா கூறியவுடன் அதிர்ச்சி அடைவார். அப்பாவாக இருந்தாலும் தேசத்துக்கு துரோகம் செய்யும் நபரை விடமாட்டேன் என்று கூறி அவரை பிடிக்க சிவாஜி செல்வார். அதன்பிறகு என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.
பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..
சிவாஜி கணேசன் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் துப்பறியும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பிறகு அவர் இதுபோன்ற படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இந்த ஒரு படம் அவரது ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தியது.

இந்த படத்திற்கு டி.கே.ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். ‘நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு இனியது’, ‘கட்டழகு பாப்பா கண்ணுக்கு’, ‘சந்தன குடத்துக்குள்ளே’ உள்ளிட்ட பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றிருந்தன. இந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியது.
இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த பல படங்களை இயக்கியுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்தை இயக்கியதும் இவர்தான்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
