பாரதிராஜா படத்தை மிஸ் செய்தவர்.. சுப்பிரமணியபுரம் படத்தையும் மிஸ் செய்தவர்.. யார் இந்த சிவச்சந்திரன்..!

By Bala Siva

Published:

இயக்குனர் மையம் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகிய சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர் சிவச்சந்திரன், சுப்பிரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி நடித்த கேரக்டரில் நடிப்பதையும் மிஸ் செய்தார். இவ்வாறு நல்ல கேரக்டர்களை மிஸ் செய்ததால் கமல், ரஜினி ரேஞ்சுக்கு வர வேண்டிய நடிகர் சிவச்சந்திரன் வில்லன் கேரக்டரை ஏற்று நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நடிகர் சிவச்சந்திரன் வால்பாறையைச் சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் கண்டிப்பாக இருந்தார். இந்த நிலையில்தான் கலை ஆர்வம் காரணமாக அவர் சினிமாவில் சேர சென்னைக்கு வந்தார். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவர் பெயரையும் இணைத்து சிவச்சந்திரன் என்று தனது பெயரை சினிமாவுக்காக சூட்டிக் கொண்டார்.

சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்.. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட ‘16 வயதினிலே’

பாலசந்தரின் ‘பட்டினப்பிரவேசம்’ படத்தில்தான் சிவச்சந்திரன் அறிமுகமானார். காமெடி படமான இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த நிலையில் ‘அவர்கள்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தார்.

sivachandran2

இந்த நிலையில்தான் ஒரு முறை சென்னை அண்ணா சாலையில் சிவச்சந்திரன் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது அவரது பைக்கை ஒரு கார் மறித்தது. அதிலிருந்து இறங்கியவர் இயக்குனர் பாரதிராஜா. அப்போதுதான் ‘16 வயதினிலே’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து இரண்டாவது படத்திற்கு தயாராகிக் கொண்டு இருந்தார்.

பாரதிராஜா காரில் இருந்து இறங்கி சிவச்சந்திரனிடம், ‘கிழக்கே போகும் ரயில் என்று ஒரு படம் எடுக்க போகிறேன், அதில் நீதான் கதாநாயகன், இந்த படம் வெளியானால் நீ எங்கேயோ சென்று விடுவாய்’ என்று கூறினார். ஆனால் சிவச்சந்திரன் தனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் வெளிநாட்டில் வேலை பார்க்க முடிவு செய்திருப்பதாக கூறி அந்த படத்தில் நடிப்பதை தவிர்த்தார்.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

வெளிநாட்டில் நீ கஷ்டப்பட்டு வேலை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, இந்த படத்தில் நீ நடித்தால் உன்னுடைய ரேஞ்சே மாறிவிடும் என்று பாரதிராஜா கூறியதோடு அதற்கு பிறகு உன் இஷ்டம் என்ற கூறிவிட்டு சென்றுவிட்டார். சிவச்சந்திரன் நடிக்க மறுத்ததால் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் நடித்தவர் சுதாகர்.

sivachandran1

கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிப்பதை மிஸ் செய்த சிவச்சந்திரன் அதன் பிறகு வெளிநாடும் செல்லவில்லை என்பதுதான் சோகம். இதனையடுத்து சிவச்சந்திரன் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். வில்லனாக நடித்தால் மீண்டும் ஹீரோவாக நடிக்க முடியாது என்று அவருக்கு பலர் எடுத்துக் கூறியும், ‘பொல்லாதவன்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். கமல்ஹாசனுக்கும் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தார்.

அதேபோல் சிவாஜி கணேசன் நடித்த ‘வெள்ளை ரோஜா’ என்ற படத்தில் வில்லனாக நடித்தார். பிரபுவும் இவரும் நெருங்கிய நண்பர்களாகினர். இந்த நிலையில்தான் பிரபு, லட்சுமி நடிப்பில் உருவான ‘என்னுயிர் கண்ணம்மா’ என்ற படத்தை சிவச்சந்திரன் இயக்கினார். இதுதான் அவர் இயக்கத்தில் உருவான முதல் படம். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து ‘ரத்த தானம்’, ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ உள்பட ஒருசில படங்களை இயக்கினார்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

நடிப்பு, இயக்கம் என மாறி, மாறி தமிழ் சினிமாவில் இருந்த சிவச்சந்திரன் ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். இந்த நிலையில் தான் சுப்பிரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி நடித்த கேரக்டரில் நடிக்க முதலில் சிவச்சந்திரனைதான் சசிகுமார் அணுகினார். ஆனால் அந்த கேரக்டரில் நடிக்க அவர் விரும்பவில்லை. இரண்டாவது முறையாக ஒரு நல்ல வாய்ப்பை சிவச்சந்திரன் மிஸ் செய்தார். இந்த நிலையில் இப்போதும் படம் இயக்க தயாராக இருப்பதாக சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.