லியோக்கு போட்டியாக அப்டேட்… மோதலை உறுதி படுத்தும் விடாமுயற்சி படக்குழு..

Published:

அஜித் பிறந்தநாள் முன்னிட்டு அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையில் படம் குறித்து வேறு எந்த அப்டேட்களும் இது வரை வெளியாகவில்லை. இதற்கிடையில் அஜித் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வீடு திரும்பியுள்ளார்.

அப்டேட்களுக்காக காத்திருக்கும் இந்த நிலையில் தான் படப்பிடிப்புக்கான எல்லா வேலைகளையும் தொடங்கி உள்ளது தயாரிப்பு நிறுவனம். வரும் 15ஆம் தேதி முக்கியமாக ஒரு அப்டேட் ஒன்றை ரிலீஸ் செய்து ரசிகர்களை குஷி படுத்த உள்ளதாக தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களுடைய தேர்வு ஒரு வழியாக முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்தோடு சேர்ந்து ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களும் இணைந்து இருக்கிறார். அர்ஜுன் 12 வருசத்துக்கு பின் மறுபடியும் அஜித்தோடு கை கொடுத்திருக்கிறார் என்பது ஒரு மிகப்பெரிய அளவில் சர்ப்ரைசை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்னதாக மங்காத்தாவில் இவர்கள் இரண்டு பேரின் கூட்டணி மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் அர்ஜுன் தாஸ், திரிஷா, தமன்னா போன்ற நடிகர்களும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த ஒரு திரைப்படத்தில் காவாலா பாடல் மூலமாக பலரையும் குத்தாட்டம் போட வைத்த தமன்னாவும் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அஜித்துக்கு முக்கிய வில்லனாக நடிக்க டாப் ஹீரோ ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இப்படி திடீரென முழு வேகம் எடுத்துள்ள விடாமுயற்சி படக்குழு ஆகஸ்ட் 15ஆம் தேதி மொத்த அப்டேட்களையும் வெளியிடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே ஆகஸ்ட் 15ஆம் தேதி அர்ஜுன் பிறந்தநாள் என்பதால் விஜய்யின் லியோ படத்தின் அடுத்த கதாபாத்திரத்தை வெளியிடலாம், அதாவது அர்ஜுனின் கேரக்டர் குறித்து அப்டேட் வெளியிடலாம் என பக்கா பிளான் போடப்பட்டிருந்தது.

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்ட அஜித்! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட சம்பவம்!

இந்த நேரத்தில் அர்ஜுன் அவர்களுடைய போஸ்டரை விடாமுயற்சி படக்குழு ரிலீஸ் செய்ய உள்ளது பல ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. இந்த அப்டேட் லியோ படக்குழுவிற்கும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கும்.

 

மேலும் உங்களுக்காக...