என்னடா ஜெயிலர் படத்திற்கு வந்த சோதனை! மீறினால் குண்டர் சட்டம் தான்!

By Velmurugan

Published:

ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திற்கு கூடுதலான கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது, முன்னதாக படத்தில் இருந்து காவாலா, ஹுக்கும், ஜுஜுப்பி என்னும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மனதிலும், சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.இந்த பாடல்களுக்கு பல பிரபலங்கள் ரீலிஸ் செய்து கொண்டாடியும் வருகின்றனர்.

அதை அடுத்து சமீபத்தில் நடந்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் உரிமையாளர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் தேவநாதன் என்பவர் அளித்துள்ள புகாரில் வரும் 10 தேதி ரிலீஸ் ஆகும் ஜெயிலர் படத்தை அரசு நிர்ணயித்த நான்கு காட்சிகளை தாண்டி ஆறு காட்சிகள் வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 1 டிக்கெட் 1500 ரூபாய் வரை விற்பனை செய்து திரையரங்கு உரிமையாளர்கள் கொள்ளை அடிப்பதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அர்ஜுனிடம் சில்க் ஸ்மிதா கேட்ட அந்த ஒரு கேள்வி! கடைசியில் என்ன நடந்தது?

துணிவு பட ரிலீஸ் கொண்டாட்டத்தின் போது ரசிகர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி அவர் நள்ளிரவு காட்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என கூறியுள்ளார். மேலும் கூடுதல் காட்சி கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தேவராஜன் வலியுறுத்தி உள்ளார்.