நடிகர் அர்ஜுனிடம் சில்க் ஸ்மிதா கேட்ட அந்த ஒரு கேள்வி! கடைசியில் என்ன நடந்தது?

தமிழ் திரையுலகின் கவர்ச்சி கன்னி என்றால் முதலில் நினைவிற்கு வருவது சில்க் ஸ்மிதா. அவரின் காந்த பார்வைகளையும் வசீகர அழகையும் யாராலும் மறக்க முடியாது. இவர் 10 வயதில் ஒரு ஒப்பனைக் கலைஞராக தான் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.

அதை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தி தான் சில்க் ஸ்மிதாவை ஒரு நடிகையாக வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். அந்த படத்தில் அவர் சிலுக்கு என்கிற பெயரில் சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

இவரின் 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கவர்ச்சி கன்னியாக வலம் வந்த சிலுக்கு அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாபத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனத்தை கவர்ந்தார்.

அந்த காலத்தில் படங்களில் முன்னணி ஹீரோயினை விட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட் கிடைக்க தான் அவ்வளவு சிரமமாக இருக்கும் என பல முன்னணி இயக்குனர்கள் கூறி புலம்பியது உண்டு.ஒரு சில காட்சிகள் வந்தாலும் அவர் நடிக்கும் படத்திற்கு அவ்வளவு மவுசு என பல பிரபலங்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். தமிழ் திரையுலக இந்த சம்பவம் மிக அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் சில்க் ஸ்மிதா குறித்து கூறுகையில் அவரது இறுதிச் சடங்கிற்கு திரை உலகை சேர்ந்த நடிகர் ஒருவர் வந்தார் என்றால் அது நடிகர் அர்ஜுன் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டில் களமிறங்கும் தளபதி விஜய்! ‘லியோ’ ஆடியோ மற்றும் டிரைலர் குறித்து மாஸ் அப்டேட்!

ஒரு படப்பிடிப்பின் போது நடிகை சில்க் ஸ்மிதா அர்ஜுனிடம் தான் இறந்து போனால் தன் சாவுக்கு நீ வருவாயா என்று கேட்டுள்ளார். இதைக் கேட்ட அர்ஜுன் என்ன பேச்சு இது எல்லாம் என்று பதில் அளித்து இருக்கிறார்.

அப்பொழுது இந்த விஷயத்தை நடிகர் அர்ஜுன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என முன்னணி பத்திரிக்கையாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்ட அர்ஜுன் மிகவும் இடிந்து போனார்.

மேலும் நேரடியாக இறுதிச் சடங்குக்கு வந்த நடிகர் அர்ஜுன் சில்க் ஸ்மிதா உடலுக்கு மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார் என்றும், இறுதிச் சடங்குக்கு வந்த ஒரே நடிகர் அர்ஜுன் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews