1 நிமிடத்தில் சரித்திர சாதனை படைத்த ஜெயிலர் புக்கிங்! கலக்கல் அப்டேட்!

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இன்று காலை இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் சென்னையின் முக்கிய திரையரங்கங்களில் அனைத்து டிக்கெட்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் டிக்கெட்களை பல ஐடி நிறுவனங்களும் மொத்தமாக வாங்கி இருப்பதாகவும் தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாக டிக்கெட்கள் கொடுத்து விடுமுறையும் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆகஸ்ட் 10 மட்டுமின்றி 11, 12,13 ஆம் தேதிகளுக்கும் விறுவிறுப்பாக டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கினாலும் 2வது நாள் அதாவது 11ஆம் தேதி அதிகாலை காட்சிகளுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் ஆகஸ்ட் 11ஆம் தேதியும் காட்சிகள் 6 மணிக்கு தான் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் ஏராளமான திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட்கள் விற்றுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில் முதல் நாள் வசூலில் ஜெயிலர் திரைப்படம் சாதனை செய்யும் என திரை உலக வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அர்ஜுனிடம் சில்க் ஸ்மிதா கேட்ட அந்த ஒரு கேள்வி! கடைசியில் என்ன நடந்தது?

சென்னையில் பிரபல தியேட்டரில் ஒன்றான கமலா சினிமா அதை உறுதி செய்து இருக்கிறது. இது தொடர்பாக கமலா சினிமா நிறுவனம் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு வெளியிட்டு உள்ளது. அதில் முத்துவேல் பாண்டியனை சந்திக்க தயாராக இருங்கள் என பதிவிட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...